சென்னை: ரஜினியின் 12.12.12 பிறந்த தின விழாவை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அரசு அனுமதி மறுத்துவிட்டது.
எனவே இந்த விழாவை வரும் டிசம்பர் 13-ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துகிறார்கள் ரசிகர்கள்.
சென்னை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடக்கும் இந்த விழா முதலில் வள்ளுவர் கோட்டத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே மாற்று இடமாக ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தை மன்ற நிர்வாகிகள் கேட்டுப் பெற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக தொடர்ந்து நடந்து வருகின்றன. விழாவுக்கான அழைப்பிதழ் மற்றும் போஸ்டர்கள் ஏற்கெனவே சென்னையை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. நாளை முதல் நாளிதழ்களிலும் வெளியாக உள்ளன.
இத்தகவல்களை சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகள் என் ராமதாஸ், ஆர் சூர்யா, கே ரவி, சினோரா அசோக் மற்றும் சைதை ரவி ஆகியோர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக