புதன், 12 டிசம்பர், 2012

லண்டனில் கர்நாடக நர்ஸ் மர்ம மரணம் ! கொலையா? தற்கொலையா ?

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தவர் ஜெசிந்தா சல்தானா (46). இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த செவ்வாய்க் கிழமை ஜெசிந்தா கிங் எட்வர்ட் மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது, ஆஸ்திரேலிய ரேடியோ ஜாக்கிகள் 2 பேர், பரபரப்பு செய்திக்காக ராணி எலிசபத் போலவும், இளவரசர் சார்லஸ் போலவும் மிமிக்ரி செய்து பேசி, கேத் மிடில்டனுக்கு அளித்த மருத்துவ விவரங்களை பெற்று ஒலிபரப்பினர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு அருகில் நர்ஸ் ஜெசிந்தா மர்மமான முறை யில் இறந்து கிடந்தார். கொலையா ?தற்கொலையா? http://www.tamilmurasu.org/index.asp


இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பதை விவரிக்க முடியவில்லை என்று லண்டன் போலீசார் கூறுகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மர்ம மரணம் அடைந்த ஜெசிந்தா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இதுகுறித்து அவருடைய கணவர் பெனடிக்ட் பர்போசா, என் மனைவி மர்ம மரணத்தால் முற்றிலும் நொறுங்கி போயிருக்கிறேன். அவரது உடல் கர்நாடக மாநிலத்தின் ஷிர்வாவில் அடக்கம் செய்யப்படும் என்று பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஜெசிந்தாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. அப்போதுதான் அவர் எப்படி இறந்தார் என்ற உண்மை தெரிய வரும்.

கருத்துகள் இல்லை: