Adhyaan Suman celebrates raksha bandhan at Mumbai red light area
மும்பை, கிரான்ட் ரோடு பகுதியில் உள்ள சிம்ப்ளக்ஸ் கட்டிடத்தில்
போலீசார் கடந்த அக்டோபர் 4ம் தேதி அதிரடி சோதனை நடத்தி 400 பெண்களை
மீட்டனர். அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் 124 பேரையும் அவர்கள் கைது
செய்து விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இவர்களை கைது
செய் தது சட்ட விரோதமானது என்று அறிவிக்க கோரி பிரபான்ஜன் தவே என்ற
வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த
மனு நீதிபதிகள் கன்வில்கர், தானுகா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில்
நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறுகையில், “வாடிக்கையாளர்களை கைது
செய்தது சரியா, தவறா என்பது, ஒவ்வொரு வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு
ஏற்ப முடிவு செய்யப்படும். பாலியல் தொழில் பெண்களிடம் செல்லும்
வாடிக்கையாளர்களை கைது செய்யலாம்Ó என்றனர். மேலும், வழக்கறிஞர் தவேக்கு
25,000 அபராதம் விதிக்கவும், அதை ஒரு வாரத்தில் செலுத்தவும் நீதிபதிகள்
உத்தரவிட் டனர். dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக