செவ்வாய், 11 டிசம்பர், 2012

காவிரியில் தண்ணீர் நிறுத்தம் : முதல்வர் ஷெட்டர் அறிவிப்பு

பெங்களூரு: ""கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு, காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது,'' என, கர்நாடக சட்டசபையில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தார்.
காவிரி பிரச்னை தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இரு மாநில முதல்வர்களும், சந்தித்துப் பேசி, சுமூகத் தீர்வு காண வேண்டும் என, சமீபத்தில் யோசனை தெரிவித்தது. இதன்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் சந்தித்துப் பேசினர்; அதில், தீர்வு கிடைக்கவில்லை.
இதையடுத்து, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு, வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என, இம்மாதம், முற்பகுதியில் உத்தரவிட்டது. அதன்படி, இம்மாதம், 6ம் தேதி இரவு, தமிழகத்திற்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதற்கு மறு நாள் நடந்த காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், "தமிழகத்திற்கு, டிசம்பர் மாதத்தில், 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.
Pugal - covai,இந்தியா

  மிழர்களின் வாழவைக் குலைக்கும் பா ஜ க ஒரு தேசியக் கட்சி என்று சொல்லவே வெட்கப்பட வேண்டும். சுயமானமுள்ள, இன உணர்வுள்ள, சக தமிழனிடம் அன்புள்ள ஒவ்வொரு நிஜத் தமிழனும் இந்த பா ஜ க வையும் அதன் தலைவர்களையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். கர்நாடக பா ஜ க இப்படி அட்டூழியம் செய்கிறதே, பிரதமர், சுப்ரீம் கோர்ட் போன்ற உயர்ந்த அலுவலர்களின் உத்தரவை மதிக்காத அராஜக அரசை ஒன்றும் செய்ய முடியாதோ?

இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு, கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பெல்காமில் நடைபெறும், சட்டசபை, மேலவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் ரகளை செய்தனர். இதனால், கடந்த வாரம் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.
இரண்டு நாள் விடுமுறைக்கு பின், பெல்காமில், கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கூடியது. கூட்டம் துவங்கியதும், காவிரி பிரச்னை குறித்து, சட்டசபையில் எதிர்க்கட்சியினர், தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:தமிழகத்துக்கு, டிசம்பர், 31ம் தேதி வரை, தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற, காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை, இம்மாதம், 9ம் தேதி மாலையே நிறுத்தி விட்டோம்.
காவிரி பிரச்னை தீர, அரசுக்கு, எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கர்நாடக விவசாயிகளின் நலன் கருதி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அரசு உறுதியாக எடுக்கும்.
"டிசம்பர் இறுதி வரை, 12 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும்' என்ற காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவின் மூலம், கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. சட்ட ரீதியாக பிரச்னை எதுவும் எழக்கூடாது என்பதற்காகவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டோம்; தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை, மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டதும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும். அதற்கு முன், கர்நாடக அரசையும், காவிரி நதியுடன் தொடர்புடைய மற்ற நான்கு மாநில முதல்வர்களையும், கலந்து ஆலோசிக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான, காங்கிரசை சேர்ந்த, சித்தராமையா பேசியதாவது:டிசம்பர் மாதம், தமிழகத்திற்கு, 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும் என, காவிரி கண்காணிப்பு குழு தெரிவித்தது பரிந்துரையே; அது உத்தரவு அல்ல. அந்த பரிந்துரையை எதிர்த்து, காவிரி கண்காணிப்பு குழுவில், கர்நாடகா முறையிடலாம். பரிந்துரையை நிறைவேற்ற முடியாது என, தெரிவிக்கலாம்.அடுத்த மழைக்கால பருவம் வரை, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படாது என, சட்டசபை முதல்வர், ஷெட்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முதல்வர் ஷெட்டர் அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
 
எனவே, அவர் பதவி விலக வேண்டும்.இவ்வாறு சித்தராமையா கூறினார்.
முதலில், சுப்ரீம் கோர்ட்டும், அதன்பின் காவிரி கண்காணிப்பு குழுவும் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக திறந்து விட்ட தண்ணீர், கடந்த சனியன்று தான் மேட்டூர் அணையை அடைந்தது. அதற்கு மறு நாளே, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை, கர்நாடகா நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: