இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு ஆன்மீக
சுற்றுலா வந்த 184 இலங்கை பயணிகள், தமிழ்நாட்டில் உள்ள சில இயக்கங்களின்
எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், திருச்சி விமான
நிலையத்தில் இலங்கை பக்தர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இலங்கை பக்தர்கள் மீது தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, இலங்கை தலைநகர் கொழும்பில், தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 தமிழ் வியாபாரிகள் கலந்துகொண்டு, இந்தியா வரும் இலங்கை மக்களின் பாதுகாப்பை இந்திய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென கோஷமிட்டனர்.
இலங்கையிலிருந்து தமிழகம் வந்த பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, இலங்கையில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக