8 பேரிடம் பழகினேன்;4 பேரை திருமணம் செய்து கொண்டேன் கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் காதல் ராணியாக வலம்வந்த சகானா, தற்போது பல இளைஞர்களின் புகாரினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைப்பதற்கு முன்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி கஸ்தூரிபா ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்ல்லப்பட்ட
சகானாவுக்கு நேற்று மாலையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி சகானா
போலீசாரிடம் கூறும்போது, எனது கர்ப்பத்துக்கு பிரசன்னாதான் காரணம் என்று
தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரசன்னாவிடம் போலீசார் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த பிரசன்னா, சகானாவின்
வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை நானாகவே இருந்தாலும் அவருடன் இனி
எப்படி வாழமுடியும் என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையின்போது சகானா, 8 பேரிடம் பழகினேன். 4 பேரை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
இதில் அவரது முதல் கணவரான கேரளாவை சேர்ந்த சித்திக்கும் அடக்கம். அப்படி பார்த்தால் சென்னையில் 3 பேரை மட்டுமே திருமணம் செய்துள்ளார்.
சகானாவிடம் ஏமாந்த பலர் அதனை மானப்பிரச்சினையாக கருதி வெளியில் சொல்லாமல் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதில் அவரது முதல் கணவரான கேரளாவை சேர்ந்த சித்திக்கும் அடக்கம். அப்படி பார்த்தால் சென்னையில் 3 பேரை மட்டுமே திருமணம் செய்துள்ளார்.
அவரிடம் ஏமாந்தவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலாக வந்து புகார் செய்யலாம். அவர்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக