பாகிஸ்தானில் குர்ஆன் அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ சிறுமியை மாட்டிவிட்ட இமாம் கைது
இஸ்லாமாபாத்:
குர்ஆனை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்தவ சிறுமியின் வழக்கில்
புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அந்த சிறுமியை வேண்டும் என்றே
மாட்டிவிட்ட இமாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை அவமதித்ததாக கிறிஸ்தவ சிறுமி ரிம்ஷா மாசிஹ் கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மெஹ்ரியா ஜாபர் பகுதியில் உள்ள ஜாமியா அமினியா பள்ளியின் இமாம் காலித் சிஸ்தி தான் வேண்டும் என்றே அந்த சிறுமியை இந்த வழக்கில் மாட்டி விட்டதாக ஒருவர் சாட்சியம் அளித்ததையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதையடுத்து அவர் ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக இமாமுக்கு எதிராக ஹபிஸ் முகம்மது ஜுபைர் மாஜிஸ்திரேட் முன்பு கூறுகையில்,
ரமலான் மாதத்தில் நாங்கள் அனைவரும் மசூதியில் கோஷாவில் இருந்தபோது ரிம்ஷாவின் பள்ளிக்கூட பை அங்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அதில் எதுவும் இல்லை. இமாம் அந்த பையை எடுத்துக் கொண்டுபோய் குர்ஆனில் இருந்து சில பக்கங்களை கிழித்து அதில் வைத்தார். பிறகு ரிம்ஷாவின் பக்கத்துவீட்டுக்காரர் மாலிக் அகமது அந்த பையை போலீசில் ஒப்படைத்தார். நீங்கள் செய்வது தவறு என்று நான் இமாமிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் இந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களை வெளியேற்ற இது தான் சாட்சியம் என்று கூறினார் என்றார்.
பாகிஸ்தான் அல்லாவால் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய நாடு என்பதால் இங்குள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் பிராத்தனை கூட்டத்தை நிறுத்தவில்லை என்றால் அவர்களை வெளியேற்றும்படி கூறியதாக சிஸ்தி கடந்த வாரம் அளித்த பேட்டியில் தெரிவி்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக