புதன், 5 செப்டம்பர், 2012

ஜாங்கிட் நகரை காணவில்லை கிரானைட் குவாரியால் விழுங்கப்பட்டுவிட்டது

மதுரை மாவட்டம், திருமோகூரில் போலீசாருக்காக உருவாக்கப்பட்ட "டைகர் ஜாங்கிட் நகர்' கிரானைட் குவாரிகளின் கைங்கரியத்தால் காணாமல் போனது. மதுரை போலீஸ் கமிஷனராக, ஜாங்கிட் 2000ம் ஆண்டில் பணிபுரிந்தார். போலீசார் நலன் கருதி, "போலீசாருக்கான வீடு கட்டும் சங்கம்' துவக்கினார். இதன் தலைவராக ஜாங்கிட் இருந்தார். நிர்வாகிகளாக போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்களாக போலீசார் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு வீடு கட்டுவதற்காக, குறைந்த விலைக்கு திருமோகூர் புதுத்தாமரைப்பட்டியில், நிலம் தேர்வு செய்யப்பட்டது.
 

கருத்துகள் இல்லை: