Viruvirupu
பெங்களூருவில் நடக்கும்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக வேண்டும் என்று எத்தனையோ தடவைகள் நீதிபதி
உத்தரவிட்டும், ஆஜராகாத ஒருவரின் தலைமையில் உள்ள அரசு, இரு தரப்பும்
ஒத்துக்கொண்டு உயர்நீதிமன்றம் முடித்து வைத்த ஒரு வழக்கை தூசு தட்டுவது
தமாஷாக இல்லையா?
உயிரை
விட்டு விட்டது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நில அபகரிப்பு
வழக்கில் முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க பொருளாளருமான ஸ்டாலின், அவரது
மகனும் சினிமா தயாரிப்பாளர் கம் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு
உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்
நீதிமன்றம் ஏற்கனவே குளோஸ் பண்ணியிருந்தது.கடந்த 2008-ம் ஆண்டு தன்னிடம் குத்தகைக்கு வாங்கிய நிலத்தை திருப்பி ஒப்படைக்காமல் உதயநிதி ஸ்டாலின் அபகரித்து விட்டதாகவும், அதனைத் திருப்பிக் கேட்டபோது உதயநிதியும், அவரது தந்தை ஸ்டாலினும் தன்னை மிரட்டியதாகவும் அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார்.
ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு, பின்னர் கோர்ட்டுக்கு வெளியே இருதரப்பும் ‘உரிய கொடுக்கல்-வாங்கலுக்கு’ சம்மதித்ததுடன் முடித்துக் கொள்ளப்பட்டது.
எனவே கோர்ட்டும் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது.
ஆனால், தமிழக அரசு விடுவதாக இல்லை. “ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீதான இந்த கிரிமினல் வழக்கை உயர் நீதிமன்றம் அழித்து விட்டது” என்று கூறி மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சுருக்கமாக சொன்னால், வழக்குடன் தொடர்புடைய இரு தரப்பும் சமாதானமாக போன பின்னரும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு.
தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப இன்று உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக வேண்டும் என்று எத்தனையோ தடவைகள் நீதிபதி உத்தரவிட்டும், ஆஜராகாத ஒருவரின் தலைமையில் உள்ள அரசு, இரு தரப்பும் ஒத்துக்கொண்டு உயர்நீதிமன்றம் முடித்து வைத்த ஒரு வழக்கை தூசு தட்டுவது தமாஷாக இல்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக