வியாழன், 6 செப்டம்பர், 2012

ஜெ. தரப்பு அதிர்ச்சி. நானே தொ டர்ந்து விசாரிப் பேன்,புது நீதிபதி சோமராஜூ

புது நீதிபதி சோமராஜூ, குற்றம்சாட் டப்பட்டவர்களுக்கு சட்டப்படி தண்டனை  

சிறப்பு வழக்கறிஞரும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார். நீதிபதியும் ஓய்வு பெற்று விட்டார். ஜெ-சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் கதி என்ன என்ற கேள்வி தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறிந்தவர்களிடமும் உள்ளது.
அதற்கான விடையைத் தேடி பெங்களூருவுக்குப் பயணமானோம்.
ஆகஸ்ட் 31-ல் ஓய்வு பெற்ற நீதிபதி மல்லிகார் ஜூனய்யாவுக்கு பிரிவு உபசார விழா நடத்திய சிறப்பு நீதிமன்ற ஊழியர்களை சந்தித்தோம். அவர்கள் தமிழரான கோர்ட் அதிகாரி பிச்சமுத்துவைக் கை காட்டினார்கள். ""மல்லிகார் ஜூனய்யா போல எங்க நலனில் அக்கறை வைத்து செயல்பட்ட நீதிபதியை இதுவரை பார்த்ததில்லீங்க. எங்களில் யாருக்காவது பிறந்தநாள்னா, எங்க எல்லோருக்கும் அவர் சாப்பாடு வாங்கிக் கொடுப்பார். ஆகஸ்ட் 4-ந் தேதி அவரோட பிறந்தநாள் வந்தப்ப நாங்க வாங்கிக் கொடுத்த சாப்பாட்டை அவர் அன்பா சாப்பிட்டார். அன்றைக்கே அவர் ஓய்வு பெற்றுவிட்டதா, தமிழக பத்திரிகைகள் சிலவற்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டினோம். இப்படி யொரு சந்தோசமான செய்தியை வெளியிட தமிழகத்தில் பலர் இருக்கிறார்களேன்னு சொன்னார். ஜெ. மீதான வழக்கில் உறுதியோடு செயல்பட்டவர் அவர்'' என்ற பிச்சமுத்து, நீதிபதிக்கு புத்தர் சிலையைப் பரிசளித்ததையும் நினைவு கூர்ந்தார்.

ராஜினாமா செய்துள்ள சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவோ, "இந்த வழக்கை மூன்றரை ஆண்டுகாலம் இழுத்தடிக்க, நீதிபதி மல்லிகார்ஜூனய்யாதான் காரணமாகிவிட்டார்' என்று சொல்லியிருப்ப தால் அதுபற்றிய விளக்கம் பெற நீதிபதியிடமும் அவரது தரப்பிடமும் தொடர்புகொள்ள முயன்றோம். பெங்களூரு புறநகர் பகுதியான கொரமல்லாவில் தேசிய விளையாட்டுப் போட்டிகளின்போது கட்டப்பட்ட வீடுகளில், நீதிபதிகளுக்கான குடியிருப்பின் ஒன்றாவது பகுதியில் ஏ ப்ளாக்கின் 6-வது மாடியில் 604-ஆம் எண் வீட்டில் உள்ள நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவை செப்டம்பர் 1 காலை 10.30 மணிக்கு சந்திக்கச் சென்றோம்.

லுங்கியும் டீசர்ட்டுமாக கதவைத் திறந்தவர், நம்மை பல முறை கோர்ட்டில் பார்த்திருப்பதால் அடையாளம் கண்டு, ""வாங்க நக்கீரன். என் வீட்டையும் கண்டுபிடிச்சிட்டீங்களா?'' என்றவர், புகைப் படங்களைத் தவிர்க்கச் சொல்லி விட்டு, ""என்னிடமிருந்து என்ன தெரியவேண்டும் உங்களுக்கு'' என்றார் நேரடியாகவே.

"சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தன்னுடைய எதிர்ப்பையும்மீறி, ஜெ. தரப்பின் இழுத்தடிப்புக்கு நீங்கள் இடமளித்திருப்பதாகக் குற்றம்சாட்டுகிறாரே' என்றோம்.

சில நிமிடங்கள் மவுனம் காத்த நீதிபதி பிறகு, ""நான் எனது கடமையை சட்டத்திற்குட்பட்டு சரியாகவே செய்தேன்'' என்றார்.

ஆனால், "உங்கள் நியமனமே சட்டப்படியானதில்லை'ன்னு ஜெ. தரப்பு வழக்கு போட்டிருக்கிறதே?' என்றோம்.

மவுனமாக இருந்தார்.

"இந்த வழக்கு எப்போதுதான் முடிவுக்கு வரும்?' என்றோம்.

நீண்ட நேர மவுனத்தை அவரே உடைத்தார். ""உங்கள் கேள்விகள், நான் வகித்த பதவி பற்றிய வழக்கையும், நான் தலைமை தாங்கி நடத்திய வழக்கைப் பற்றியும் இருக்கின்றன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகள் பற்றிய எனது கருத்துகளை, ஓய்வு பெற்றுவிட்டேன் என்பதற்காகவே நான் பத்திரிகைகளிடம் வெளிப்படுத்துவது சரியல்ல. அப்படி செய்யவும் கூடாது'' என்றவர், புன்னகையுடன் நம்மை வழியனுப்பிவைத்தார்.

நீதிபதிக்கு நெருக்கமான சட்டத் துறையினரிடம் பேசிய போது, ""ஆச்சார்யா அளவுக்கு மல்லிகார்ஜூனய்யாவும் இந்த வழக்கினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர்'' என்கிறார் கள். அவர்களிடம் தொடர்ந்து பேசியபோது, ""சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்படி நடக்கும் வழக்கு என்பதால், இந்த வழக்கின் பொறுப்பை ஒருவித பயத்துடன்தான் மல்லிகார் ஜூனய்யா ஏற்றுக்கொண்டார். கடவுள் நம்பிக்கையும் வீர சைவ வழிபாட்டு முறையும் அவருக்கு இரண்டு கண்கள். தனது வழிபாட்டு முறைக்குரிய மடங்களின் மூலமாகக் கூடத் தன்னை யாரும் தொடர்புகொண்டுவிடக்கூடாது என்பதில் அவர் கவன மாகவே இருந்தார். ஊழல் குற்றச்சாட்டில் மாவட்ட நீதிபதிகளாக இருந்தவர்களை கர்நாடக ஹைகோர்ட்டே பதவி விலக வைத்தது. அதே அந்தஸ்தில் உள்ள நீதிபதியான மல்லிகார் ஜூனய்யா தன் மீது அத்தகைய குற்றச்சாட்டுகளின் நிழல்கூட படிந்துவிடக்கூடாது என்ற எச்ச ரிக்கையோடு செயல்பட்டார்.

ஜெ. தரப்பு எப்படியெப்படி யெல்லாம் புதுப்புது சட்டப்பிரச் சினைகளைக் கிளப்பியது என்று உங்களுக்குத் தெரியும். அதுபற்றி சீனியர் நீதிபதிகள்-சட்ட வல்லுநர் களிடம் விவாதித்தால் கூட தனது எண்ண ஓட்டம் வெளியில் தெரிந்து விடும் என்பதால் சொந்த செலவில் சட்டப் புத்தகங்களை வாங்கிப் படித்து, அதில் உள்ள பாயின்ட்டு கள் அடிப்படையில் உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதனால்தான், மல்லி கார்ஜூனய்யா அளித்த உத்தரவு களுக்கு எதிராக ஒரு உத்தரவைக் கூட கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெ. தரப்பால் பெற முடியவில்லை. வழக்கை இழுத்தடிக்க, நீதிபதி தன் தரப்பிலிருந்து எந்த இடமும் கொடுக்கவில்லை. ஜெ.வும் சசிகலா வும் இந்த வழக்கில் ஆஜராகாமல் இழுத்தடித்தபோது, முதலமைச்சர் என்பதால் ஜெ. ஆஜராகவில்லை என்று அவர் தரப்பு வக்கீல்கள் வாதாடினார்கள். அதற்கு மல்லிகார்ஜூனய்யா, "ஜெ. முதல்வர் பொறுப்பில் இருக்கிறார் என்கிறீர்கள். அவர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர். அவர்கள் மீது இந்த நீதிமன்றத்தால் கடும் நடவடிக்கை எடுக்க முடியும்' என்று அழுத்தமாகச் சொன்னார்.

அதேநேரத்தில், ஜெ. தரப்பு தன் மீது தேவையில் லாத பழிகளை சுமத்திவிடக்கூடாது என்பதில் ரொம் பவே கவனமாக இருந்தார். அதனால் விட்டுப் பிடித்தார். தனது நியமனத்திற்கு எதிராக ஜெ. தரப்பு தாக்கல் செய்த வழக்கு அவரை ரொம்பவே பாதித்துவிட்டது. ஓய்வு பெறும் நேரத்தில் இப்படி செய்கிறார்களே என அவர் வேதனைப்பட்டார். நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவைப் பொறுத்தவரை, இந்த வழக்கை 90% நடத்தி முடித்து விட்டதால், இனி புதிதாக எதையும் யாரும் கொண்டு வந்து திணிக்க முடியாது என்கிற உறுதியும் சந்தோஷமும் அவருக்கு இருக்கிறது'' என்கிறார்கள் நீதிபதிக்கு வேண்டிய சட்ட வல்லுநர்கள்.

கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தபோது, ""ஓய்வு பெறும் மாவட்ட நீதிபதிகள் பெரும்பாலும் விசாரணை கமிஷன்களிலும் கன்ஸ்யூமர் கோர்ட்டுகளிலும் பதவிகளைக் கேட்டுப் பெறுவார்கள். ஆனால் மல்லிகார் ஜூனய்யா அதை மறுத்துவிட்டார். ஆனால், சிறப்பு நீதி மன்றத்தில் அவருடைய பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவிட்டால் அதை மறுக்கமாட்டார். எனவே மீண்டும் அவரே இந்த வழக்கை விசாரிக்கவும் வாய்ப்புள்ளது'' என்றனர்.


மல்லிகார்ஜூனய்யா ஓய்வுபெற்றதையடுத்து, சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சோமராஜூ ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி என்ற கூடுதல் பொறுப்பைப் பெற்றிருக்கிறார். கர்நாடக உயர்நீதிமன்றம் இதனை ஒரு நடைமுறை யாகவே கொண்டுள்ளது. நீதிபதி மனோலியைத் தொடர்ந்து மல்லிகார்ஜூனய்யா நியமிக்கப்படுவதற்கு முன் அயத் ஹன்டின் என்ற சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி இப்படிக் கூடுதல் பொறுப்பைப் பெற்றிருந்தார். தற்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் பதிவாளரும் வெளியூரில் இருந்ததால், துணைப் பதிவாளர்தான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிபதியாக மல்லிகார்ஜூனய்யாவை நியமிக்க உயர்நீதிமன்றம் மட்டுமே உத்தரவிட்டதென்றும், கர்நா டக அரசு இதற்கான உத்தரவை இடவில்லை என்பதா லும் இந்த நியமனம் செல்லாது என்பதுதான் ஜெ. தரப்பின் வழக்கு. நிலுவையில் உள்ள இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு, முதல் நீதிபதியை நியமிக்க மட்டும்தான் இரண்டு உத்தரவுகள் வேண்டும். அடுத்தடுத்த நீதிபதிகளுக்கு அது தேவை யில்லை என்ற நிலையை எடுத்தது. அந்த நிலையை உறுதி செய்யும் வகையில் சோம ராஜூ நியமனத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றத் தின் சார்பில் மட்டுமே உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அத்துடன், முன்பு கூடுதல் பொறுப்பு பெற்ற சி.பி.ஐ. நீதிபதி அயத் ஹன்டின், வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும் அதிகாரம் மட்டுமே கொண்டவராக இருந்தார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சோமராஜூக்கு வழக்கைத் தொடர்ந்து நடத்தும் அதிகாரத்தை அளித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.

செப்டம்பர் 3-ஆம் தேதி சிறப்பு நீதி மன்றத்தில் விசாரணை யை மேற்கொண்ட நீதி பதி சோமராஜூ, வழக் கை 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டதுடன், "நானே தொ டர்ந்து விசாரிப் பேன்' என்றும் தெரிவித்தார். இவரது பயோ- டேட்டாவை அறிந்த ஜெ. தரப்பு அதிர்ச்சி யடைந்துள்ளதாம். ஹூப்ளியில் மாவட்ட நீதிபதியாக இருந்த சோமராஜூ, குற்றம்சாட் டப்பட்டவர்களுக்கு சட்டப்படி தண்டனை அளிக்கும் தன்மை கொண்டவர். சி.பி.ஐ. கோர்ட்டுக்குப் பொறுப்பேற்று 2 மாதங்களில் இரண்டு வழக்குகளை விசாரித்து இரண்டி லுமே கடும் தண்டனை வழங்கியிருக்கிறார். தண்டனை பெற்ற ஒருவர் ரயில்வே அதிகாரி. மற்றொருவர், வங்கி அதிகாரி. இவர் வசம் தங்களுடைய வழக்கு சிக்கியிருப்பதால், அடுத்த கட்ட மூவ்களை எப்படி வைப்பது என்ற ஆலோசனையை ஜெ.தரப்பு வழக்கறிஞர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

புது நீதிபதி, புது அரசு வழக்கறிஞர்கள் பழைய -உறுதியான குற்றச்சாட்டுகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது.

-பெங்களூருவிலிருந்து பிரகாஷ்
அட்டை மற்றும் படங்கள் : ஸ்டாலின்





அடுத்த அரசு வழக்கறிஞர்!
திங்கட்கிழமையன்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி விக்ரம் ஜித்சென் பெங்களூரு திரும்பியதால், ஆச்சார்யாவுக்குப் பதில் புதிய அரசு வழக்கறிஞரை நியமிப்பார் என்ற எதிர் பார்ப்பு அதிகரித்தது. ஆச்சார்யா தன்னுடைய ராஜினாமாவில் உறுதியாக இருப்பதால், அவருடைய ஜூனியரும் 15ஆண்டு கால சட்ட அனுபவம் உடையவருமான சந் தேஷ் சவுடாவுக்கு சான்ஸ் அதிகம் என்பதே வக்கீல்கள் மத்தியில் பேச்சாக இருந்தது.

thanks nakkeeran + navukarasan , Barbados

கருத்துகள் இல்லை: