வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அமலா பால் அலப்பறைகள் செய்யாமல் ஆர்வத்துடன்


சில படங்களிலேயே வளரும் நடிகை, பெரிய நடிகையாக வருவார் என புகழப்பட்ட நடிகை அமலா பால், படங்கள் சரிவர கைகொடுக்காததால் படிப்பை தொடரப்போனார் 
படிப்பையாவது முடித்துவிட்டு வருவோம் என ”தேர்வு எழுத வேண்டும் அதனால் படங்களில் நடிக்கவில்லை” எனக் கூறிவிட்டு சென்றார். தேர்வு முடிந்து வந்ததும் சரியான நேரம் கனியும் என காத்திருந்த அமலா பாலுக்கு கைகொடுத்தது இயக்குனர் சமுத்திரக்கனி தான். 3 வருடங்களாக ஆதிபகவன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஜெயம் ரவி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் தான் அமலா பால் கதாநாயகிமுன்பு மாதிரி அலப்பறைகள் ஏதும் செய்யாமல், அமைதியாக ஆர்வத்துடன் எல்லாவற்றையும் கேட்டு கேட்டு நடிக்கிறாராம். ஜெயம் ரவியும் சமுத்திரக்கனிக்கு தன் வீட்டில் ஒரு பார்ட்டி கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாராம். சமுத்திரக்கனி இருவரது ஒத்துழைப்பாலும் கனிந்து கிடக்கிறாராம்.

கருத்துகள் இல்லை: