வியாழன், 28 ஜூன், 2012

பாகிஸ்தான் அமைச்சர் அமெரிக்காவில் சிக்கினர்

அமெரிக்க விமான நிலையத்தில் சிக்கினார் பாகிஸ்தான் வி.ஐ.பி.!

Viruvirupu


மும்பை பயங்கரவாத தாக்குதலின் சூத்ரதாரி என அறியப்பட்ட ஹாஃபிஸ் சயீத்துடன் தொடர்பு உடையவர் என்ற சந்தேகத்தில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர், அமெரிக்க விமான நிலையத்தில் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டார்.
நேற்றிரவு அமெரிக்காவின் ஹியூஸ்டன் விமான நிலையத்தில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் வந்திறங்கியபோதே, விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
ஷேக் ராஷித் என்ற இந்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர், இந்தியா, மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக அறிக்கை விடுவதில் பிரபலமானவர்.
ஷேக் ராஷித்: ‘இந்தியாவில் தாக்குதல் நடத்தியவரின் கூட்டாளி’
அறிக்கைகளில் இவர் அதிரடியாக தாக்கும் அமெரிக்காவுக்கு இந்த முன்னாள் அமைச்சர் ஏன் சென்றார்? பாகிஸ்தானில் உள்ள தமது அரசியல் கட்சிக்கு நிதி திரட்டுவதற்கு என்று சொல்லப்படுகிறது. (பாகிஸ்தான் அவாமி முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் இவர்)

அமெரிக்க ஹோம்லேன்ட் செக்யூரிடி இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் டி.வி. சேனல், “அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் வேண்டுகோளின் பின், இந்த முன்னாள் அமைச்சர் விடுவிக்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.
61 வயதான ஷேக் ராஷித், மும்பை தாக்குல் சந்தேக நபர் ஹாஃபிஸ் சயீத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்று பாகிஸ்தான் மீடியாக்களில் நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்தது.
அதை இந்த முன்னாள் அமைச்சர் எப்போதும் மறுத்ததில்லை. காரணம், ‘இந்தியாவில் தாக்குதல் நடத்தியவரின் கூட்டாளி’ என்ற லேபல், இவரது கட்சிக்கு பாகிஸ்தானில் செல்வாக்கு தேடித் தந்தது.
இப்போது அமெரிக்க விசாரணையில், “அப்படி எந்த தொடர்பும் கிடையாது” என்று நிச்சயம் மறுத்திருப்பார். இல்லாவிட்டால், வெளியே வந்திருக்க முடியாதே!
ஷேக் ராஷித், 2006-2008 காலப்பகுதியில், பாகிஸ்தானின் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர்.

கருத்துகள் இல்லை: