மும்பை தாக்குதல் தீவிரவாதி அபு ஜிண்டாலுக்கு மஹராஷ்டிரா அமைச்சரே அடைக்கலம் கொடுத்தார்?
டெல்லி: மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில்
ஒருவனான அபு ஜிண்டாலுக்கு மஹாராஷ்டிர பெண் அமைச்சரான பைசியா கான் அடைக்கலம்
கொடுத்திருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து டெல்லி வந்தபோது பிடிபட்ட அபு ஜிண்டாலிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின் போது மும்பை தாக்குதலுக்குப் பிறகு 2009-ம் ஆண்டு மஹாரஷ்டிர பெண் அமைச்சரான பெளசியா கானுக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தில் தங்கியிருந்ததாக அவன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.
அபு ஜிண்டால் கூறும் பெண் அமைச்சர் மஹாராஷ்டிர மேலவை உறுப்பினராவார். தம் மீதான புகார்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தமது அரசு இல்லத்தில் பலரும் வந்து தங்கிப் போகின்றனர். அவர்களைப் பற்றிய முழு விவரமும் அறிந்திருப்பது என்பது சாத்தியமற்றது என்றார்.
இருப்பினும் தம்மிடம் விசாரணை நடத்தப்பட்டதால் அதற்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் பெளசியா கான் கூறியுள்ளார்.
இதனிடையே அபு ஜிண்டாலை தங்களிடம் ஒப்படைக்குமாறு மும்பை போலீசார் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்ற நிதிமன்றம் அபு ஜிண்டாலுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக