வியாழன், 28 ஜூன், 2012

தோல்வி அறிக்கையுடன் சோனியாகாந்தியை சந்தித்த சிரஞ்சீவி


ஆந்திராவில் மிகப்பிரமாண்டமான அளவில் பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார் நடிகர் சிரஞ்சீவி.
அதே நேரத்தில் ஜெகன் ‌மோகன் ரெட்டி துவக்கிய ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ்கட்சியின் போட்டிய‌ை சமாளிப்பதற்காக சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா எம்.பி பதவிவழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் 18 சட்டசபை மற்றும் நெல்லூர் லோக்சபாவிற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஜெகனின் போட்டியை சீரஞ்சீவி சமாளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 18 தொகுதிகளில் 15 தொகுதிகள் மற்றும் நெல்லூர் லோக்சபா தொகுதியையும் ஜெகனி்ன் கட்சி கைப்பற் றியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்த அறி்‌க்கையுடன் சிரஞ்சீவி காங்கிரஸ் தலைவர் சோனியா சந்திப்பு நிகழ்ந்துள்ளது

கருத்துகள் இல்லை: