இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
வாஷிங்டன்: மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் அடிக்கடி ஜன்னல்கள் வழியாக யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பார்ப்பாராம். தற்போது அவர் இசையமைக்கும், பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறதாம்.
மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் தனது குழந்தைகள் பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட்டுடன் பெவர்லி ஹில்ஸ் வீட்டில் தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஆவிகள் மீது நம்பிக்கை இருந்தது. தற்போது அவரே ஆவியாக வருகிறார் என்று கூறப்படுகிறது நானே வருவேன் இங்கும் அங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக