பெங்களூர்: தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை
விசாரித்து வரும் நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் நியமனமே சட்டவிரோதமானது
திடீரென ஜெயலலிதா தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
1991-96- ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக
இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த
வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றம்
அமைக்கப்பட்டது. பல்லாண்டுகால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு தொடர்ச்சியான
முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் ஒரு புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மல்லிகார்ஜூனய்யாவை நியமித்ததே சடடவிரோதம் என்று கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் அறிவுறுத்தலின்படி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டிருந்தாலும் உயர்நீதிமன்றத்தை ஆலோசித்த பிறகே நீதிபதியை நியமித்திருக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறை மல்லிகார்ஜூனய்யா நியமனத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்றும் "திடீரென" ஜெயலலிதா தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல் இந்த வழக்கின் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கும் எதிராக பல மனுக்களை ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்து ஓய்ந்து விட்ட நிலையில் தங்கள் வழக்கில் கடும் கண்டிப்பு காட்டி வரும் மல்லிகார்ஜூனய்யாவை வெளியேற்றும் வகையிலும் அதேபோல் இழுத்தடிப்பு யுக்தியாகவும் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக