உங்கள் மனம் என்று நீங்கள் பொதுவாக எண்ணிக்கொண்டிருப்பது உங்களின்
conscious mind ஐ தான். அதாவது உங்களின் அன்றாட வாழ்வில் நீங்கள் சுய
உணர்வோடு எடுக்கும் தீர்மானங்கள், உதாரணமாக இப்போது நான் காபி
குடிக்கவேண்டுமா அல்லது டீ குடிக்க வேண்டுமா? என்பது போன்ற சுய உணர்வோடு
மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அல்லது எண்ணங்கள் என்று குறிப்பிடலாம்.
எங்களுக்கே தெரியாத எங்களின் மனம் என்று ஒன்று இருப்பதை பற்றி இனி பாப்போம். இதை ஆழ்மனம் அல்லது sub consicious mind என்றோ un conscious mind என்றோ அழைக்கலாம்.இந்த உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் உள் மனமானது பொதுவாக எமக்கு தெரியாத எமது உள்ளுணர்வுகளின் காப்பகம் என்று கூறலாம். இந்த unconscious mind இல் ரகசியமாக புதைத்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணங்கள் அல்லது விருப்பங்கள் வெறுப்புக்கள் போன்றவை மிகவும் பலம்வாய்ந்த உணர்வுகளாகும்.
பெரும்பாலும் இவைதான் எமது வாழ்வின் உண்மையான blue print ஆகும். ஒருவர் எஞ்சினியர் இருந்தால் நிச்சயம் அவரின் இந்த unconscious mind இல் இதற்கான சக்தி அல்லது கரு இருந்திருக்கும்
நமது வாழ்வில் இடம்பெறும் இன்பமோ துன்பமோ எல்லாமே இந்த unconscious mind என்ற அத்திவாரத்தின் மீது கட்டி எழுப்பப்பட்ட மாளிகைகள்தான்.இந்த unconscious mind இன் அதிசய பரிமாணங்களை எமது தேகாரோக்கியத்தில் மிக தெளிவாக காணலாம். சகல விதமான நோய்களும் அல்லது ஆரோக்கியமும் இதில் இருந்தே உருவாகிறது.இதை கண்டுபிடிப்பதற்கு பூதக்கண்ணாடி தேவையில்லை மிகத்தெளிவாக கண்டு பிடிக்காலாம். எவரின் unconscious mind இல் நோய்களை பற்றிய பயம் அல்லது நினைப்புகள் அதிகம் இருக்கின்றதோ அவர்கள் அந்த நோய்களை தம்மை நோக்கி ஈர்த்துவிடுவார்கள். அதிகம் நோய்வைபடுபவர்கள் எல்லாம் அனேகமாக நோய்களை பற்றி சிந்திப்பவர்களாக இருப்பதை அவதானிக்க முடியும்.
எமது மனதில் நாம் பார்க்கும் காட்சிகள் கேட்கும் கருத்துக்கள் உணரும் உணர்சிகள் எல்லாமே எதோ ஒரு காலத்தில் நமது unconscious mind என்ற இரும்பு பெட்டகத்தை அடைந்து விடுகின்றன. பின்பு அவை மெதுவாக நமது அன்றாட வாழ்கையை தீர்மானிக்க தொடங்கி விடுகின்றன.
குறிப்பாக விளம்பர நிறுவனங்கள் இந்த ரகசியத்தை நன்றாக புரிந்து வைத்திருக்கின்றன.
புத்திசாலித்தனம் நிறைந்த சில விளம்பர வல்லுனர்கள் மனிதர்களின் unconscious mind ஐ இலக்கு வைத்தே விளம்பர உத்திகளை வகுக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளை கவரும் யுக்திகளை மிக நுட்பமாக கையாளுகின்றனர்.
மனிதர்கள் வாயால் என்னதான் வசங்களை முழக்கி தள்ளினாலும் அடிப்படையில் மனிதர்கள் பெருதும் உணர்ச்சி வசப்பட்டவர்களே. இந்த unconscious mind தான் உணர்சிகளை பெரிது உருவாக்குகிறது.உணர்வுகளை உருவாக்குவதில் வசனங்களை விட காட்சிகளுக்கும் சப்தங்களுக்கும் உள்ள பங்கு மிக பெரிது.
எமது conscious mind காரண காரியங்களை சீர்துக்கி தெரிவுகளை மேற்கொள்ளும் வல்லமையை கொண்டுள்ளது.
ஆனால் நமது unconscious mind ஆனது பெரிதாக காரண காரியங்களை ஆராயும் தன்மை கொண்ட்டதல்ல. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது.உண்மையில் மந்திரம் மாயம் என்பது போன்ற மகா அற்புத சக்தியை தன்னகத்தே கொண்டது.எடுத்த காரியம் எதிலும் வெற்றி காண்பவர்கள் எல்லோரும் இந்த ரகசியத்தை அறிந்தோ அறியாமலோ நன்றாக கண்டுகொண்டு கடைபபிடிப்பவர்களாகவே இருக்கின்றனர்.
நினைத்ததை அடையும் வல்லமையும் சரியானதை நினைக்கும் திறமையும் ஒருங்கு சேர அமைந்தவரே வெற்றிகரமான பேர்வழிகள் ஆவார்.
இந்த அற்புத சக்தியை மனிதர்கள் எல்லோரும் பெறமுடியும். நேற்றுவரை எல்லாமே பிழைத்து இருந்தாலும் இன்றிலிருந்து எல்லாவற்றையும் நாம் சரிசெய்யலாம்.
உங்களின் உள் மனதையும் வெளி மனதையும் ஒருங்குசேர ஒரே வண்டியில் பூட்ட வேண்டும். சரியான இடத்திற்கு போய்சேர இதுதான் ஒரே மார்க்கம்.
இதற்கு பல வழிகள் உள்ளன.முதல் வழி நீங்கள் இதைபற்றி சிந்திக்க வேண்டும் நிஜமாகவே சிந்திக்க வேண்டும். இந்த வேகமான உலகத்தில் பலரும் சிந்திப்பதற்கு சோம்பல் உள்ளவர்களாகவே தென்படுகிறார்கள்.வாழ்க்கையில் சதா ஓடுகிறார்கள் ஆனால் சிந்திக்க தொடங்கினால் தூங்கிவிடுகிறார்கள் அவ்வளவு சோம்பல்.
எப்படி உங்கள் இரு வகை மனங்களை ஒரு இடத்தில் சேர்ப்பது? இதோ ஒரு சிறிய எளிய பயிற்சி.
தியான முறைகளில் விபரிக்கப்படுவது போல் உங்கள் மூச்சினை கட்டுப்படுத்தி உங்கள் வசப்படுத்துங்கள்.
சிறிது நேரத்திற்கு பின்பு அதை கைவிட்டு விட்டு வழமைக்கு திரும்புங்கள். எப்போதும் உங்கள் மூச்சானது உங்களின் unconscious mind இன் செயலாகவே இருக்கிறது , ஆனால் எப்போது நீங்கள் அதை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களோ அப்போது அது உங்கள் conscious mind இன் காரியமாகிவிட்டது.
பின்பு அது தனது வழமையான இடத்திற்கு போய் விட்டதும் அதனோடு உங்கள் unconscious mind தனது இயக்கத்தை ஆரம்பித்து விட்டதை மிக நுட்பமாக அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும். இந்த பயிற்சியை பல தடவைகள் மீண்டும் மீண்டும் செய்துபார்க்க இது புரியும்.
நமது சுய முன்னேற்றத்திற்கு இந்த இரு வகை மனங்களும் சேர்ந்து வேலை செய்வது அவசியம். அப்பொழுதுதான் எமக்கு உதிக்கும் எண்ணங்கள் திண்ணியதாக இருக்கும். எண்ணங்கள் திண்ணியதாக இருந்தால் என்று வள்ளுவரும் கூறியது இதை தான்

www.quantumstudies.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக