தற்போதுள்ள சூழ்நிலையில்
பொருளாதாரத்தை மேற்பார்வையிட மன்மோகன் சிங்கே சரியான நபர் என்று காங்கிரஸ்
கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் நிதி
அமைச்சகத்தை வெளிநபர் ஒருவரிடம் ஒப்படைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று
கூறப்படுகிறது.
இதனால் மன்மோகன் சிங்
தானே நிதி அமைச்சக பொறுப்பை வைத்துக் கொள்வார் என்றும் அவருக்கு
உதவுவதற்காக மூத்த அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அரசு
வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்நாட்டிலும்,
வெளிநாடுகளிலும் இந்திய பொருளாதாரம் கடுமையான சூழ்நிலையை சந்தித்துவரும்
நிலையில் அரசும் காங்கிரஸ் கட்சியும் நிதித்துறையை வல்லுநர் ஒருவரே கவனிக்க
வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. மத்திய அமைச்சரவையில் உள்ள இதர
அமைச்சர்களும் நிதி அமைச்சக பொறுப்பேற்க தயக்கம் காட்டுகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக