திருச்சி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு திடீரென
மொட்டை அடித்துக் கொண்டதால், ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகள்
பிடிப்பட்டு விட்டதாக, தி.மு.க.,வினரிடையே பரபரப்பான தகவல் பரவியது.
திருச்சி, தி.மு.க., மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தம்பி ராமஜெயம், 2012 மார்ச் 29ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். கொலைக் குற்றவாளிகளை கண்டறிய, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், ஏழு தனிப்படை அமைக்கப் பட்டன.திருச்சியில் வெகுகாலம் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம், சிறப்பு(!) விசாரணைக்காக கன்னியாகுமரியில் இருந்து வரவழைக்கப் பட்டார். தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள், கூலிப்படைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தகவல்:இறுதியாக இவர்களிடம் எவ்வித துப்பும் துலங்காததால், வழக்கு விசாரணை, ராமஜெயம் உடல் கிடந்த இடத்தில் இருந்து மீண்டும் துவங்கியது. இம்முறை தனிப்படையினருக்கு சில உருப்படியான தகவல்கள் கிடைத்தன.இதேபோல், நேரு மற்றும் அவரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களிடம் சாதாரண முறையில் விசாரணை நடத்திய தனிப்படையினர், போலீஸ் பாணியில் விசாரிக்க துவங்கிய உடன், தகவல்கள் கொட்டத் துவங்கின. அதன் அடிப்படையில் சிலரை மட்டும் போலீசார் கண்காணிக்க துவங்கினர். வழக்கு விசாரணையில் ஒரு தேக்கம் ஏற்பட்ட நிலையில், திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், ஆந்திர மாநில இடைத்தேர்தல் போலீஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். டி.ஐ.ஜி., அமல்ராஜ் கமிஷனராக கூடுதல் பொறுப்பேற்றார்.
தனிப்படை:ராமஜெயம் கொலை வழக்குக்காக அமைக்கப்பட்ட தனிப்படையினரின் விசாரணையை, மறு ஆய்வு செய்தார். ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான தனிப்படையை அதிரடியாக கலைத்தார். கன்னியாகுமரியில் இருந்து வந்த கோடிலிங்கத்தை திரும்பி அனுப்பினார்.திருவாரூர் எஸ்.பி., சேவியர் தன்ராஜ், நாகை ஏ.டி.எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில், புதிய தனிப்படையை அமைத்தார். இத்தனிப்படை அமைக்கப்பட்ட முதல்நாளே, நேருவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி, அதிரடியாக வழக்கு விசாரணையை துவக்கியது.
நேரு "மொட்டை':புதிய தனிப்படையின் வேகத்தால், "ராமஜெயம் வழக்கில் விரைவில் குற்றவாளி சிக்குவார்' என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொலை நடந்து, 66வது நாளான நேற்று அதிகாலை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு சென்ற நேரு, மொட்டையடித்து, மீசை, தாடியை எடுத்துக் கொண்டார்."தம்பி கொலையாளியை கண்டு பிடிக்கும் வரையில் தாடியை எடுக்கமாட்டேன்' என்று சபதம் போட்டு, பெரிய தாடி வைத்திருந்த நேரு, திடீரென மொட்டை போட்டுக் கொண்டதால், "ராமஜெயம் கொலையாளியை தனிப்படையினர் கைது செய்துவிட்டனர்' என்ற தகவல், தி.மு.க., வினர் இடையே பரவியது.
இதுகுறித்து, தனிப்படை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:ராமஜெயம் கொலை வழக்குக்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் செய்த விசாரணைகளை, புதிய தனிப்படை மறு ஆய்வு செய்து, இரவு, பகல் பாராமல் அதில் உள்ள தவறுகளை சரி செய்து வருகின்றனர்.குறிப்பாக, ராமஜெயம் வீட்டில் இருந்து கிளம்பியது இரவா? அதிகாலையிலா? என்பதில், பிரேத பரிசோதனை அறிக்கை, வாட்ச்மேன், ஓய்வுப்பெற்ற நீதிபதி கொடுத்த தகவல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.புதிய தனிப்படை விசாரணை மூலம், "ராமஜெயம் வீட்டை விட்டு கிளம்பியது அதிகாலை 5 மணிக்கு தான்' என்பது உறுதியாகி இருக்கிறது. ராமஜெயம் உடனிருந்த ஒரு நபர் தான், கொலைக்கு பின்னணியாக செயல்பட்டிருக்கிறார்.அவர் மற்றும் அவரை சார்ந்தோர் குறித்த விசாரணை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில், குற்றவாளிகள் பிடிபடுவர். இதுவரை கொலையாளிகள் யாரையும் பிடிக்கவில்லை. நேரு மொட்டையடித்ததுக்கு என்ன காரணம் என்று, அவரிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, நேரு தரப்பில் விசாரித்தபோது, "ராமஜெயம் கொலைக்கு பிறகு மனம் உடைந்தநிலையில் இருந்த நேரு, கட்சிப்பணிகளில் முன்பை போல ஆர்வம் காட்டாமல் இருந்தார். அவ்வப்போது, கூட்டங்களில் தலைகாட்டினாலும் நேருவின் கோலத்தை பார்த்து நிர்வாகிகள் துக்கம் விசாரிக்கின்றனர். கட்சியினர் விருப்பத்துக்கு இணங்கவே, நேரு மொட்டையடித்துள்ளார்' என்றன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக