சில ஆண்டுகளுக்கு முன் சங்கர
மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண்
என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும்
குடும்பத்திலிருந்து வந்தவள் நான். எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது
தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னைஅனுப்பி வைத்தார். நானும்
மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன்.
சங்கர மடம் சார்பில் தொடங்கப்படவுள்ள அம்மா என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக
பணியாற்றுவது தொடர்பாக என்னுடன் ஜெயேந்திரர் பேசினார். அவர் பேசியவற்றில்
சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக
நான்நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும்
நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர். அவர்கள் இருவரும் நெருக்கமாக
உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.
அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த
ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத்தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர்
என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமானவை. அந்தப் பெண்மணியைப்
போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதிர்ந்து
போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ, நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக
கேட்டவாறே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர்,
முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்) எல்லாவற்றையும் கூறவில்லையா என்று அந்தப்
பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார். அவர் இல்லை என்றவுடன், மிகவும் அசிங்கமான
வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார். பின்னர் அதே வேகத்தில்
என்னிடம் திரும்பி, என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது.
இங்கு
நடந்தவற்றைவெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு
உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையே சீரழித்து விடுவேன் என்று மிரட்டினார்.
புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயா இருக்கே... பூவும்
பொட்டுமாகத்தானே இருக்கே என்று கூறியவாறே என் உடலை வர்ணிக்க
ஆரம்பித்துவிட்டார். அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான்
அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன் என்று தனக்கு நேர்ந்த அவமானத்தை
வெளியிட்டிருந்தார். இப்படிப்பட்ட ஜெயேந்திரரின் விமர்சனத்தை சர்வ
சாதாரணமாக எதிர்கொணடார் நித்தியானந்தா.
ஜெயேந்திரரது பாலியல் கூத்துக்களை
அம்பலப்படுத்தியதால்தான் சங்கரராமன் கொல்லப்பட்டார். சங்கராச்சாரியின்
கூலிப்படை கோவிலில் வைத்தே கொன்றது. என்பதுதான் குற்றச்சாட்டு.
அதன்மீதுதான் வழக்கு நடக்கிறது. தேவநாதனது கருவறை செக்ஸ் சி.டி தோற்றுவித்த
அதிர்வலைகள் கூட வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கொடூரத்திற்கு
ஏற்படவில்லை. தேவநாதன் கூட பக்தர்களின் நம்பிக்கையைத்தான்
இழிவுபடுத்தினார். ஜெயேந்திரரோ, பக்தர்கள் தன்னை கேள்வி கேட்கக் கூடாது
என்பதற்காக சங்கர ராமன் கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டால்
புதுச்சேரி நீதிமன்றப்படிகளில் நிற்கிறார். சங்கரமடத்தின் மானம் கைய்யில்
தண்டத்தோடு நடந்துகொண்டிருக்கிறது. இதை குறித்தெல்லாம் கேட்க வக்கில்லாத
இந்துத்துவ அமைப்புகள்தான் நித்தியானந்தாவை கேள்வி கேட்கின்றன.
நித்தியானந்தாவை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்பதல்ல நம் கேள்வி.
பார்ப்பானைவிட பார்ப்பனியத்தைத் தாங்கிப்பிடித்துக் கொண்டு அரதப்பழசான
இந்து மதத்தை அறிவியலின் துணையோடு இன்றைய கார்ப்பொரேட் கலாச்சார
இந்துக்களைக் கவரும் நித்தியானந்தா உள்ளபடியே மிகவும் ஆபத்தானவர் என்பதில்
எள்ளளவும் அய்யமில்லை. அதேநேரத்தில் இந்து மதத்தின் உயிர் நாடியான
ஜாதிமுறையைக் காக்கும் பணிகளில் ஒன்றான மடங்களைக் காக்க இந்த
இந்துத்துவாக்கள் துடிப்பது ஏன்? எல்லோரும் இந்துக்கள் தான் என்று
வெட்கமின்றி சொல்லிக்கொண்டே ஆதீன மடத்திற்கு சென்று வழிபடுவேன் என்று
உறுமும் அறிக்கை விடும் நபர்களால் சங்கர மடத்திற்குள் சென்று இவர் கோவணத்தை
அவிழ்க்க முடியவில்லை. இந்து மதக்காவலர்களாக வேடம் பூணுபவர்கள் முதலில்
உள்நுழைய வேண்டியது சங்கரமடத்தில். துணிச்சல் இருக்கிறதா? இல்லையா? பூணூல்
தடுக்கிறதா? உங்கள் மதத்தின் பெருமை சீரழிந்துவிடுமா? சீரழிய என்ன
இருக்கிறது. சீரழிந்த மதத்தில் சீரழிய என்ன இருக்கிறது. அழியத்தான் கொஞ்சம்
உங்கள் மதம் மீதமிருக்கிறது.
நான் மதுரை ஆதினத்துக்கு எந்த ஊசியும் போடவில்லை.
ஜெயேந்திரர்
யோக்கியனாகும் முயற்சிக்கு மேற்கண்டவாறு நித்தி பதிலளித்ததும், மெல்லவும்
முடியாமல், விழுங்கவும் முடியாமல், தன்னை நித்தி மொத்தமாக
அம்பலப்படுத்திவிடக்கூடுமென்று சமாதானத்தூது அனுப்பியிருக்கிறார்.
சமாதானத்தூது அனுப்பிய இந்த ஜெகத் குருவின் யோக்கியதையை நம் வாசகர்களுக்கு
மீண்டும் நினைவூட்ட அனுராதா ரமணன் ஒரு பத்திரிக்கை பேட்டியில்
அம்பலப்படுத்திய செய்திகளிலிருந்து ஒரு பத்தி மட்டும் கீழே தரப்படுகிறது
ஒரு சி.டி
விரைவில்
நித்தி பற்றி குறும்படம் ஒன்று எடுக்க இருக்கிறாராம் நடிகை ரஞ்சிதா.
ஏற்கெனவே எடுத்த குறும்படம் தான் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்
கொண்டிருக்கிறதே. அதற்குள் அடுத்த குறும்படமா? என்று குதூகலித்து கமெண்ட்
போடுகிறார்கள் இணையதள இளைஞர்கள்.
ஒரு இடி!
நித்தியானந்தா ரஞ்சிதா என்ற பெண்ணோடு
சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று ஜெயேந்திரர் கொடுத்த அறிக்கைக்கு நித்தி
பதில் சொல்வது ஒரு புறம் என்றால், என்னைப் பற்றிப் பேச ஜெயேந்திரருக்குத்
தகுதியில்லை என்று ரஞ்சிதா விட்ட அறிக்கை சங்கர மடத்துக்குக் கிடைத்த இடி.
சபாஷ்! சரியான போட்டி! எங்கே பார்ப்போம். ஒவ்வொருவரின் வண்டவாளங் களையும்
தண்டவாளத்தில் ஏற்றி, மாறி மாறி உங்களை நம்பும் மடப் பதர்களுக்கு நீங்களே
விளக்கத்தையும் கொடுத்து விடுங்கள். எங்கள் பணி கொஞ்சம் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக