புதன், 6 ஜூன், 2012

ZEEtamil மகள் என்றும் பாராமல் உல்லாசத்திற்கு அழைத்தவர் எனது தந்தை-முருகனின் மகள் பார்கவி

http://www.deccanchronicle.com/channels/nation/south/triple-murder-comes-light-tv-show-002
விழுப்புரம்: எனது தந்தை முருகன் மோசமான நடத்தை கொண்டவர். பெற்ற மகள் என்று கூடப் பார்க்காமல் என்னை பலமுறை உல்லாசத்திற்கு அழைத்தவர் என்று குமுறியபடி கூறியுள்ளார் விழுப்புரத்தில் நண்பர், அவரது மகள், மருமகன் ஆகியோரைக் கொலை செய்து புதைதது சிக்கியுள்ள முருகனின் மகள் பார்கவி.பார்கவிதான், முருகனை ஜீ தமிழ் டாக் ஷோ மூலம் அம்பலப்படுத்தியவர். தனது தந்தை குறித்து அவர் போலீஸாரிடம் கூறுகையில்,
எனது தந்தை முருகன் நல்லவர் கிடையாது. அவர் பலமுறை மகள் என்றும் பாராமல் என்னையே உல்லாசத்திற்கு அழைத்தவர்.
இதனால் எனது தந்தையுடன் வீட்டில் இருக்கவே எனக்கு பிடிக்காது.
எனது தந்தையை நம்பி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா, சிலம்பரசன் ஆகியோர் அடைக்கலம் தேடி வந்தனர். சிலம்பரசன் வெளியூருக்கு வேலைக்கு சென்றபோது லாவண்யாவிடமும் எனது தந்தை தவறாக நடக்க முயன்றார்.
இந்நிலையில் தான் லாவண்யாவுக்கும், சிலம்பரசனுக்கும் எனது தந்தை ஆப்பிள் ஜுஸில் ஏதோ கலந்துகொடுத்து சிலம்பரசனின் தலையில் பலமாக தாக்கி அவரை கொலை செய்தார். மயக்கத்தில் இருந்த லாவண்யாவை குரல்வளையை இறுக்கி சாகடித்து விட்டார்.
பின்னர் மகளையும், மருமகனையும் பார்க்க வந்த சேகருக்கும் எனது தந்தை மதுபானத்தில் ஏதோ கலந்துகொடுத்து அவரது தலையிலும் பலமாக தாக்கி கொலை செய்தார்.
இதனால் தான் நான் சதீசை காதலித்து வந்த விவகாரத்தையும் எனது தந்தையிடம் மூடி மறைத்தேன். அவருக்கு தெரிந்தால் எங்களையும் கொலை செய்து விடுவார் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: