புதன், 7 செப்டம்பர், 2011

இன்னமும் கனவு காணும் இரண்டு கஜேந்திரன்கள்!

ஈழத் தமிழர் இதயங்களுக்கு! (பாகம்- 4) – அர்ச்சுணன்!

*புதுடெல்கி மகாநாட்டில் ஒருமித்த உடன்பாட்டிற்கு வரமுடியாமல் போன எமது அருந்தலைவர்கள்!
*புதுடெல்கியில் தெருச்சண்டியனாக நடந்து கொண்ட த.தே.கூ.ப.உ சுபந்திரன்!
*லண்டனில் அநாகரீகமாக நடந்து கொண்ட சேனாதிராஜா!
*தமிழ்தலைவர்கள் தம்மை முன்னிலைப்படுத்தியே தமிழர்களின் போராட்டத்தினை பார்க்கின்றார்கள்!
முன்னர் சம்மந்தர் அவர்கள் கனவு கண்டது போன்று தற்பொழுது தமிழீழ கனவில் கஜேந்திரகுமார் போன்னம்பலமும் , குதிரை கஜேந்திரனும் கனவு காணுகின்றார்கள். திம்பு பேச்சுக்களின் போது இந்தியா தமிழ் கட்சிகளுக்கு சில விடயங்களை மிகவும் தெளிவாக கூறியிருந்தது. எமது நாட்டில் மானிலங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் அதிகாரங்களை காட்டிலும் அதிகமாக உங்களுக்கு வழங்குமாறு நாம் இலங்கை அரசினை கோர முடியாது. அடுத்து தனிநாட்டு கோரிக்கைக்கு நாம் ஒருபோதும் ஆதரவரவு வழங்க மாட்டோம் என்ற விடயங்கள் அடங்குபவையாகும். டெல்கி சென்ற இவர்கள் இருவரும் இரு தேசம் என்ற அடிப்படையில் தமது கோரிக்கையினை முன் வைத்துள்ளனர். இந்தியாவினால் முன்மொழியப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு அப்பாலான தீர்வு என்ற அடிப்படையில் ஏனைய கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உடன்பாட்டிற்கு வந்த போதும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியானது இரு தேச கோட்பாட்டினை முன்வைத்தமையினால் இந்தியாவினால் ஏற்க கூடிய, தமிழ் கட்சிகளின் ஒருமித்த ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியாமல் போயுள்ளது.




மேலும்

கருத்துகள் இல்லை: