நடுவானில் பறந்த விமானத்தில் உயிரிழந்த காதலர் அருகே 9 மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் காதலி அமர்ந்திருந்த சம்பவம் தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
சிங்கப்பூரிலிருந்து நியூஸிலாந்துக்கு பயணித்த விமானத்தில் மதிய உணவு பரிமாற்றப்பட்ட போது மாட்டிறைச்சி உணவு தொண்டையில் சிக்கியதையதால் ரொபேர்ட் றிப் பின்கேல் என்ற மேற்படி காதலர் உயிரிழந்தார்.
தொண்டையில் இறைச்சித் துண்டு சிக்கி ரொபேர்ட் றிப்பின்ரகேல் (31 வயது) துடித்த போது, அவர் தன்னை மறந்து சிரிப்பதாக அவரது காதலியான வனேஸ்ஸா பிறீச குல் (27 வயது) ஆரம்பத்தில் தவறாக நினைத்துள்ளார்.
‘அவர் விமான தொலைக்காட்சி திரையில் காண்பிக்கப்பட்ட திரைப்படக் காட்சியை பார்த்து சிரிப்பதாகவே நான் ஆரம்பத்தில் தவறுதலாக நினைத்தேன். ஆனால் நான் திரும்பிப் பார்த்தபோது, அவர் கண்கள் செருக பேச முடியாது திணறினார். அவரது உதடு வெளிறிக் கொண்டிருந்தது.
நான் அவரது கையை பற்றியபடி அவரை முத்த மிட்டேன். ஆனால் திடீரென அவர் துடிக்க ஆரம்பித்தார் » என வனேஸ்ஸா கூறினார்.
இந்நிலையில் மேற்படி ‘ஜெட் டாஸ்ர்’ விமான சேவைக்கு சொந்தமான விமானத்திலிருந்த மருத்துவர் ஒருவரும் மருத்துவத் தாதிகள் இருவரும் வரவழைக்கப்பட்டனர். இதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட் டது.
இதனையடுத்து விமான ஊழியர்கள் ரொகபேர்ட்டின் சடலத்தை விமான ஊழியர்களின் ஓய்விடத்துக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது வனேஸ்ஸா அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.
தனது அன்புக்குரிய காதலன் சடலம் விமானம் தரையிறங்கும் வரை தனக்கு அருகிலுள்ள ஆசனத்திலேயே இருக்க வேண்டும் என வனேஸ்ஸா பிடிவாதம் பிடித்தார். வேறு வழியின்றி விமான ஊழியர்கள் அவரது கோரிக்கைக்கு இணங்கினர்.
ரொபேர்ட்டும் வனேஸ்ஸாவும் ரொபேர்ட்டின் பெற்றோரின் பிறந்ததின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் முகமாக கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து நியூஸிலாந்து சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரொபேர்ட் மூன்று வருடங்களாக சிங்கப் பூரில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ரொபேர்ட் மூன்று வருடங்களாக சிங்கப் பூரில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது சடலம் கடந்த சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ரொபேர்ட்டின் மரணம் தொடர்பான விரிவான பிரேத பரிசோதனை அறிக்கை இம்மாத இறுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக