வணக்கம் பிம்சவிய
பிம்சவிய அறிந்து கொள்வோம்
பிம்சவிய நிகழ்ச்சித் திட்டமானது, மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ், காணி, காணி அபிவிருத்தி அமைச்சினூடாக அமுல் செய்யப்படுகின்றது. இதன் மூலம் மிகவும் பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான நிலம் இலங்கை மக்களுக்கு அளிக்கப்படுகின்றது. 2007 ஆம் வருடத்தில் தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றாக ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற பிம்சவிய நிகழ்ச்சித் திட்டம், 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்துப் பதிவுச் சட்டத்தின் ஊடாக சட்ட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக உங்களது காணியை அளந்து உரித்தை உறுதி செய்து அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் உரித்துச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலப் பகுதியில் தீவு முழுவதிலுமுள்ள காணிகளுக்காக உரித்துப் பதிவினை மேற்கொண்டு உரித்துச் சான்றிதழ்களை விநியோகிப்பதே எமது எதிர்பார்ப்பாகும். பிம்சவிய நிகழ்ச்சித் திட்டத்தை அமுல் செய்வதில் 04 பிரதான திணைக்களங்கள் பங்களிப்புச் செய்கின்றன. அத் திணைக்களங்கள் வருமாறு: காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள • நில அளவைத் திணைக்களம் • காணி உரித்து நிருணயத் திணைக்களம் • காணி ஆணையாளர் நாய திணைக்களம் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழுள்ள • பதிவாளர் நாயகத் திணைக்களம் |
இந் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான குறிக்கோள்கள் 03 ஆகும்.
|
பிம்சவிய “சுபாரதீ” வானொலி நிகழ்ச்சியிலும் ....
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை ஊடாக ஒலிபரப்புச் செய்யப்படுகின்ற “சுபாரதீ” நிகழ்ச்சி ஊடாக, பிம்சவிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் மூன்று மாதகாலம் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், இந் நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்ச்சி 2011.08.22 ஆம் திகதி காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை ஒலிபரப்புச் செய்யப்படவுள்ளது.
www.bimsaviya.gov.lk/web/
www.bimsaviya.gov.lk/web/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக