பிரபல சிற்பி வி.கணபதி ஸ்தபதி நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். இவர் குமரிமுனையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், பூம்புகார் கண்ணகி கோட்டம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல இந்து கோவில்களையும் நிர்மாணித்தவர் ஆவார். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்
மறைந்த கணபதி ஸ்தபதியின் உடல் நேற்று மாமல்லபுரம் வடகடம்பாடி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம், நக்கீரன் கோபால், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம்,முத்தையா ஸ்தபதி, விஸ்வ ஜனசக்தி கட்சி தலைவர் பொன்.பரமகுரு உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சிற்பிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கணபதி ஸ்தபதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாமல்லபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக