புதன், 7 செப்டம்பர், 2011

இரண்டு மோதிரங்களும் திருடப்பட்டு வயோதிபர் செம்மணியில் மீட்கப்பட்டார்!

யாழ்.செம்மணியில் அடிகாயங்களுடன் மயங்கிய நிலையில் காணப்பட்ட வயோதிபர் மீட்கப்பட்டார்!


யாழ்.செம்மணியில் அடிகாயங்களுடன் மயங்கிய நிலையில் காணப்பட்ட வயோதிபர் மீட்கப்பட்டார்!
செம்மணியில் அடிகாயங்களுடன் மயங்கிய நிலையில் காணப்பட்ட வயோதிபர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.இருபாலை, பழம்வீதியைச் சேர்ந்த ராமு நடராசா (வயது 67) என்ற இவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின் வீதியில் வீசப்பட்டார் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த 3 வருடங்களாக நல்லூர் முருகன் ஆலயத்தில் தொண்டு செய்து வருபவராவார். அவர் வழமை போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கோயிலுக்குச் சென்றுள்ளார். மாலையாகியும் அவர் வீடு வராதமையினால் அவருடைய உறவினர்கள் நல்லூர் கோயில் அறங்காவலரிடம் சென்று விசாரித்துள்ளார். குறித்த நபரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு நபர்கள் வந்து அழைத் துச் சென்றதாகவும், சிறிது நேரத்தின் பின்னர் அவர்களில் ஒருவர் அவருடைய சைக்கிளை நல்லூர் கோயிலுக்கு முன்பாகக் கொண்டு வந்து விட்டதாகவும் அறங்காவலர் கூறியதாக உற வினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வயோதிபரின் உறவினர்கள் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடத்தப்பட்ட வயோதிபர் நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் செம்மணிப் பகுதியில் மயங்கிய நிலையில் உள்ளார் எனக் கேள்வியுற்ற உறவினர்கள் அங்கு சென்று அவரை உடனடியாக வைத்திய சாலையில் அனுமதித்தனர். கடத்தப்பட்ட வயோதிபரின் கையில் இருந்த ஒன்றேகால் பவுண் நிறையுடைய இரண்டு மோதிரமும் 2 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளன

கருத்துகள் இல்லை: