Mr S. Yogarathinam and Mr S. Rajarathinam, Partners, Saravana Stores Enterprises, at the launch of Jamaai Ice creams in Chennai on Thursday. —
இந்த நிறுவனம் மீது ‘‘வாடிக்கையாளர்களை சரியாக நடத்துவதில்லை, பொருட்களின் தரம் சரியில்லை, பணியாளர்களை கொடுமை செய்கிறார்கள்’’ என்ற புகார்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டம் மட்டும் குறைவதே இல்லை.
கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் ‘சரவணா’ குரூப்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான 27 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடியாக ரெய்டு நடத் தினார்கள். மூன்று நாட்கள் நடந்த இந்த ரெய்டால், அதிகம் பாதிக்கப்பட்டது, வாடிக்கையாளர்கள்தான்.
ரம்ஜான் போன்ற திருவிழாக்கள் வருவதால், குறைந்த விலையில் துணிகள் வாங்கலாம் என்று வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். வருமான வரித்துறையினர் சுமார் ஐநூறு பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சரவணா நிறுவனத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றிய அவர்கள், அதனை லாரிகளில் அள்ளிச் சென்றார்கள்.
மூன்று நாட்கள் ஏன் இந்த சோதனை என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சரவணாஸ் நிறுவனங்களில் உள்ள அனைத்துப் பொருட்களையும் மொத்தமாக கணக்கெடுக்க வேண்டிய கட்டாயம். அவற்றை கணக்கெடுக்க மூன்று நாட்கள் ஆனது. நாங்கள் கைப்பற்றிய ஆவணங்களை சரிபார்க்கவே மாதக்கணக்கில் ஆகும். அதன் பின்னர்தான் எந்த அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்பதைச் சொல்லமுடியும்.
இந்த ரெய்டில் கணக்கில் காட்டப்படாத 18 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதோடு, ஆறு கடைகளில் இருப்புக் கணக்குக்கு அதிகமாக ரூ.60 கோடிக்கு ரொக்கம் இருந்தது. அதனையும் கைப்பற்றியுள்ளோம்’’ என்றனர்.
வருமானவரித்துறையின் இந்த ரெய்டுக்கு பங்காளிச் சண்டைதான் காரணம் என்கிறார்கள், சிலர். சரவணாஸ் நிறுவனம், ‘சரவணா ஸ்டோர்ஸ்’, ‘சரவணா செல்வரத்தினம்’ என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தன. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொழில் போட்டி ஏற்பட்டது. அதன் காரணமாக ஒருவரையொருவர் மாட்டிவிட மொட்டைக் கடுதாசிகள் போட்டதாகவும், அதுதான் இந்த ரெய்டுக்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.
சரவணா ஸ்டோர்ஸ், தான் வாங்கும் எந்தப் பொருளுக்கும், விற்கும் பொருட்களுக்கும் முறையான பில் கொடுப்பது இல்லையாம். பொருட்கள் சப்ளை செய்பவர்களை நள்ளிரவில் வரச் சொல்வார்களாம். அவர்களுக்கான தொகையை பணமாகத்தான் கொடுப்பார்களாம். ஒரு நாள் தாமதமாக வந்து பணத்தைக் கேட்டால், பணத்தை பாது காத்ததற்காக அபராத வட்டி போட்டு பிடித்தம் செய்து கொள்வார்களாம். இதையெல்லாம் வருமான வரித்துறைக்கு போட்டுக் கொடுத்ததாலேயே ரெய்டு நடந்ததாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் சில்லறை வணிகத்தில் வளர்ந்து வருவது சிறு கடை வைத்திருக்கும் சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து ஏதாவது ஒருவகையில் எங்களுக்குத் தொந்தரவு செய்து வருகிறார்கள். அவர்களில் சிலர் போட்ட மொட்டைக் கடிதங்களை வைத்து எங்களை வருமான வரித் துறையினர் விசாரித்தனர். எங்களிடம் உள்ள எல்லா பொருட்களுக்கும் முறையான ஆவணங்கள் இருக்கிறது. நாங்கள் இதனை சட்டப்படி எதிர்கொள்வோம்’’ என்று தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக