யாழ்ப்பாணம் நாவாந்துறையில் நேற்று இடம்பெற்ற முறுகல் சம்பவம் தொடர்பில் சுமார் நூறு பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ். மனித உரிமைகள் அலுவலகத்தின் முன்பாக கைது செய்யப்பட்ட நபர்களின் பெறோர்கள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
நாவாந்துறைப் பகுதியில் நேற்று சந்தேகத்திற்கிடமான சிலரின் நடமாட்டத்தையடுத்து பொது மக்களுக்கும் படைத்தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, படையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சுமார் நூறு பேர் வரை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் இன்று யாழ். நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக