வியாழன், 25 ஆகஸ்ட், 2011

தமிழ்த்தேசியத்தின் மூவேந்தராட்சியில் நடக்கும் முரண்பாட்டுக் கூத்துக்கள்

அருந்தா
ஜனநாயக முறையில் மக்களாற் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றப் பிரதிநிதிகள் மக்களின் தேவையை முன்னெடுப்பதற்கு; மக்களின் வாழ்வும் வளத்துக்கும் உழைக்கவேண்டும். தாங்கள் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால்த் தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற பெயரில் ஒரு அரசியற் கட்சி இருந்தாலும் அந்தக் கடசியின் பெயரில் ஆட்சி செய்பவர்கள் சம்பந்தர், சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிபதி என்ற மூவருமே என்று யாழ்ப்பாணத்து வழக்கறிஞரும் தமிழ்த் தேசியக் கூட்டணி அங்கத்தவருமாயிருந்த றமேடியஸ் அவர்கள் அண்மையிற் சொல்லியிருந்ததாகச் செய்திகள் வெளிவந்தன.
ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு இவர்களஜிடம் எந்த அர்த்தமும் கிடையாது என்று பரவலாகப் பேசப்படுகிறது. முரண்பாட்டு அரசியல் மூலம் தங்கள் இருப்பை வாழ்நாள்பூராவும் தக்கவைது;துக்கொள்ளத் தமிழ்த்தேசியத்தைப் பாவிப்பவர்கள் என்பது பொதுவான அபிப்பிராயமாகவிருக்கிறது. சுமந்திரன் என்ற வழக்கறிஞரைத் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்களே தவிர சுமந்திரன் சொல்லும் யதார்த்தமான கருத்துக்களுக்கு இவர்கள் எந்த மதிப்பும் கொடுப்பது கிடையாது என்று சொல்லப்படுகிறது.
இம்மூவரும் தங்களின் சுயநலத்தை மட்டும் பேணுவதால் வேறு எவரது கருத்துக்களையும் யாரையும் மதிப்பது கிடையாது என்றுசொல்லிக்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டணிப் பாராளுமன்றவாதியாகத் தெரிவு செய்யப்பட்ட பியசேனா கட்சியிலிருந்து விலகிவிட்டார். தங்களை மிஞ்சிய தலைவர்கள் யாரும் தமிழருக்குக் கிடைக்கமாட்டார்கள் எனகிற மனோபாவத்தில்; இவர்கள் வலம் வருகிறார்கள். புலம் பெயர்ந்த புலிக்கூட்டத்துக்குச் சேவகம் செய்யும் இவர்களின் பணியால்  தமிழ்மக்களுக்கு எந்தவொரு விமோசனமும் கிட்டப்போவதில்லை.; தமிழ்த்தேசியம் என்ற பெயரில் அரசியல் அறிவில்லாத மனிதப்பிறவி கூட பாராளுமன்றம் போகலாமென்பது தமிழருக்குத் தெரிந்த விடயமென்றாலும் இவர்களைத் தாண்டிப்போக ஒரு சமுகநலவாதி அரசியலுக்குள் நுழைய முடியாத பல தடைகளால் தமிழ்ப்பகுதிகளில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.
புலிகள் கடந்த காலங்களிற் செய்த 'பே(ய்)ச்சுவார்த்தைகள்' என்ற பெயரில் காட்டிய பேய்க்காட்டலைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களைச் கூறிக்கொண்டு உலக வலம் வரும் தமிழ்த் தேசியக் கூட்டணியினரும் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள். நாடுகடந்த ஈழம் கேட்டுக்; கோர்ட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு ஐந்து நடசத்திர ஹொட்டேல்களில் மகாநாடுகள் வைது;துக்கொண்டு திரியும் புலம் பெயர்ந்த பெரிய தமிழ் மனிதர்களின் பேச்சைக்கேட்டுக்கொண்டு இந்த மும்மூர்த்திகளும் தமிழ்ச்சமுகத்தை, புலம் பெயர்ந்த தமிழர் ஈழம் எடுத்துத் தருவார்கள் என்று சொல்லி  பொய்ப்பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தக்காலத்தில், புலிகளுடன் அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்போதெல்லாம் நொண்டிச்சாட்டை வைத்துக்கொண்டு, பேச்சுவார்த்தைகளை முறிப்பதை இராஜதந்திரம் என்று நினைத்தனர் புலிகள். இவர்கள் அதெற்கெல்லாம் ஆமாமசாமி போட்டவர்கள் இந்தப் பாராளுமன்றவாதிகள். இந்தியப் படை வந்து வடக்கையும் கிழக்கையும் சேர்த்த 'ஈழதேசத்தைக்கையிற்' கொடுத்தபோது ,அதைத் தமிழரை அழிக்கப்பல வியுகங்களை வரைந்த ஐக்கியதேசியக்கடசியுடன் சேர்ந்து சிதைத்தவர்கள் புலிகளும் இந்தச்சிம்மங்களான தேசியக்ககூட்டணியும்.
யாழ்ப்பாணத்தில் இன்னுமொரு தரம் இவர்கள் எப்படி தெரிவு செய்யப்பட்டார்கள் என்று விசாரித்தபோது, புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்கள், அரசாங்கத்துடனிருக்கும் தமிழ் வேட்பாளரை வீழ்த்தவேண்டும் என்று வெளிநாடுகளிலிருந்து இறைத்த பணம்தான் வெற்றி கொண்டது என்று ஒரு முற்போக்குவாதியான யாழ்ப்பாணத்து; தமிழ்க்கலாநிதி துக்கத்துடன் விளக்கம் தந்தாh.;
ஜனாதிபதி தேர்தலின் போது சரத்பொன்சேகாவிற்கு தமிழ்மக்களின் ஆதரவை பெற்றுக்கொடுப்பதற்கு நடாத்தப்பட்ட பேரத்தில் பல கோடிகள் கைமாறியதாக கூறப்படுகிறது. சரத்பொன்சேகாவை எந்த அடிப்படையில் தமிழ்மக்கள் ஆதரிக்கவேண்டும் என இம்மூவேந்தர்களும் கூறிய காரணங்கள் வெறும் அரசியல் மலட்டுத்தனம் கொண்டவை.
தமிழ் மக்களுக்கு அரசியல் விடிவு வராமலிருப்பது அவர்களின் நாற்காலிகளைத் தக்க வைக்கத் தேவையானதாகும். அதற்காக எந்த விதமான முரண்பாட்டு அரசியலையும் முன்னெடுக்கத் தயங்காதவர்கள் இந்த மூவேந்தர்களும். 1995ம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த, தமிழரின் பிரச்சினையைத் தீர்க்கும் மிகவும் திறமையான திட்டத்தை தங்களின் ஆத்மீக நண்பனான ஐக்கிய தேசியக்கட்சியின்  ரணிலுடன்சேர்ந்து எதிர்த்தார்கள்.
இப்போது, நாடுகடந்த ஈழம் எடுப்போருடன் சேர்ந்து கொண்டு இலங்கையில் வாழும் ஏழைத்தமிழர்களுக்குப் பிரச்சினையைக்கொடுக்கிறார்கள்.
தமிழ்த்தேசியத்தால் பல துன்பப்பட்ட ஒருத்தரின்; பழைய நினைவுகளின்படி சொன்னதாவது,

' மூன்றாவது தலைமுறையான தமிழ்த்தேசியத் தலைவர்கள்; இன்னும் தொடர்ந்தும் தமிழ் மக்களை அழிக்கும் பேச்சுக்களைப்பேசி இளம் தலைமுறையினரைக் குழப்புகிறார்கள்
நாங்கள் 1970 ஆண்டுகளின் ஆரம்ப கால கட்டத்தில்; தமிழரசுக்கட்சியினர் மேடைகளிற் பேசிய உணர்ச்சிவசமான பேச்சுக்களால் உந்தப்பட்டவர்கள். பாடசாலைகளிற் உயர்கல்வி படித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையரசின் கல்வித் தரப்படுத்தல் வந்தது. அந்தத் திட்டம் கெட்டிக்காரத் தமிழரை அடக்குவதறகாக இனவெறிபடித்த சிங்கள அரசு கொண்டுவந்த பாரதூரமான சட்டம் என்று எங்கள் தலைவர்கள் சொன்னார்கள். “எங்கள் தமிழ் இனத்தைக் கொடுமை செய்யும் சிங்கள அரசை வெல்ல இளம் தலைமுறை முன்வரவேண்டும். தமிழரசைக் கொண்டு வரவேண்டும். அப்படியான போராட்டத்தில் வெல்ல வேண்டும். அந்தப் போராட்டத்துக்காக எதையும் தியாகம் செய்யவேண்டுமென்று நீங்கள் ; சபதம் செய்ய வேண்டும். எங்களை வருத்தும் சிங்களவனின் தோலையுரித்துக் காலணியாகப்போடும் எனது சபதம் உங்கள் போராட்டத்தின் வெற்றியிற்;  தங்கியிருக்கிறது”என்று அன்றைய தலைவரின் துணைவியார் சூழுரைத்ததை எங்கள் தார்மீகக்கடமையாக ஏற்றுக்கொண்டோம் ,நம்பினோம்.
“சிங்களவர்களை எதிர்க்கும் தமிழ்த்தலைவர்கள் பலருக்குச் சரியாகத் தமிழ் பேசவராது என்பதைச் சரியாக உணரத் தெரியாத வயது எங்களுக்கு. தமிழருக்காகப் போராட எங்களை உசுப்பிவிட்ட தமிழ்த் தலைவர்களுக்குச் சிங்களப் பகுதிகளில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்ததை உணரமுடியாத அறியாமையுடன் தமிழுக்காக எங்கள் உயிரைப் பணயம் வைக்கத் துணிந்தோம். தலைவர்களின் பேச்சைக்கேட்டு அறப்போர் தொடங்கினோம்.
 எங்களைப்போன்ற பல இளம் தமிழர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அக்கால கட்டத்தில் அறப்போரில் நம்பிக்கையில்லாத சிலரும் தமிழருக்கான போரில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அதன் பிரதிபலிப்பு 1974ல் நடந்த உலகத் தமிழ் மகாநாட்டில் எதிரொலித்தது. எப்போதும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்களின் மூக்கை நுழைக்கும் இந்திய சந்தர்ப்பவாதிகளில் ஒருத்தரும்; இலங்கை அரசால் தடைசெய்யப்படடிருந்தவருமான உலகத் தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் ஜனார்தனனைக் கள்ளத் தோணியில் சிலர் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவந்தார்கள். அப்போது உலகத் தமிழ் நாட்டின் முக்கியஸ்தராக இருந்தவர்; ( இப்போது லண்டனிலிருக்கும் கலாநிதி ) ஜனார்த்தனின் வருகையை விரும்பவில்லை. அதன் எதிரொலியாக அவர் மகாநாடடின் பாதுகாப்புக்கருதி போலிசுக்குத் தகவல் கொடுத்தார். இளைஞர்களுடன் முறுகல் ஏற்பட்டது. அதனால் வந்த பிரச்சினையில் ஒன்பது அப்பாவி மக்களின் உயிர்போனது. ஆதை இலங்கை அரவாங்கத்தின் தலையில் போட்டவர்கள் எங்களின் தமிழ்த் தலைவர்கள்
அதைத் தொடர்ந்து, அறப்போரின் தத்துவம் கொண்ட ஆளுமையைவிட ஆயுததாரிகளின் ஆதிக்கம் தலைவர்களிடம் தலைதூக்கத் தொடங்கியது.
“அப்போது யாழ்ப்பாணத்தில் ஏழைத் தமிழர்களுக்கு உதவி செய்த துரையப்பாவை எங்கள் தமிழ்த்தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. தமிழர்களுக்கு ஏதும் நன்மைகள் செய்யப்பட்டல் தங்களின் செல்வாக்கு பறந்துபோகும் என்பதால் துரையப்பாவைத் தலைவர்களுக்கப் பிடிக்கவில்லை. அவரை, ஜனநாயக வழியில் எதிர்க்க முடியாத தமிழ்த்தலைவர்கள்,முரட்டுத்தனமான பேர்வழியான முட்டங்கண்ணன் (பிரபாகரன்) மூலம் முடித்துவிட்டார்கள். அந்தக்கொலையால் பல ஏழைத்தமிழர்களுக்கு துரையப்பாவாற் யாழ்ப்பாணத்தில் கிடைத்திருக்க வேண்டிய பல நன்மைகள் கிடைக்காமற் தடுத்தார்கள். அந்த முண்டக்கண்ணன் தன்னை வளர்த்த தலைவனையே வீழ்த்திவிட்டான்”
“அதேபோல்,அன்று தமிழ் இளைஞர்களின் அபிமானததைப்பெற்ற தங்கக்குட்டியையும் காட்டிக்கொடுத்தார்கள்.அதன்பின்  ஓவ்வொரு தமிழ்த தலைவராக போட்டுத் தள்ளினார்கள். தமிழருக்குக் குரல் கொடுக்கு யாருமற்ற நிலையையுண்டாக்கத் தமிழ்ப் புத்திஜீவிகளைக் கொலைசெய்தார்கள்.
“ பல வருடங்களாகத் தமிழர்கள் அகதிகளாக அங்குமிங்கும் அலைந்தார்கள். எனது இரண்டு தமிபிகள் வாழவேண்டிய வயதில் தமிழுக்காக அழிந்தார்கள். தங்களின் தேவைக்குப் போர்க்கைதிகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் போர் புரிந்த இருசாராராலும் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களை விடுதலை செய்யச்சொல்லி இந்தத் தலைவர்கள் வாய் திறக்கவில்லை.
இன்று பல்லாயிரம் தமிழர் பரிதாப நிலைக்குத் தள்ளப்படடிருக்கிறார்கள். இது பற்றி இந்த மூவேந்தர்களும் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.  தமிழரின் துயர் துடைப்போம் என்ற போர்வையில் ; தமிழை வைத்துப் பிழைக்கப் பலர் தாயகத்திலும் புலம் பெயாந்த நாடுகளிலும் தோன்றினார்கள். தாயகத்தில் ஏழைக்குழந்தைகளைப் பலவந்தமாகப்பிடித்துக்கொலைக்களம் அனுபபிவிட்டுத் தங்கள் குழந்தைகளை மட்டும் உயர்கல்விக்கு அனுப்பினார்கள். பருவமடையாத இளம்பெண்ணை தற்கொலைதாரியாக  வெடிக்க வைத்து அந்தப் படத்தைக்காட்டிப் பணம் சேர்த்த புலிகளின் புலம் பெயர் புல்லுருவிகள் தங்களின் இலாபத்தில், தங்கள் மகளுக்குப் பூப்புநீராட்டுவிழாவைத்து மகிழ்ந்தார்கள். தனது ஒருமகள் புலம் பெயர்ந்த நாட்டில் புஸ்ரீபுரிப்புடன்வாழ இலங்கையில் பல ஏழைத்தமிழ்ப்பெண்களை விதவைகளாக்கினார்கள்.
மேற்பட்ட துக்க விடயங்களைப் பகிர்ந்து கொண்த தமிழர் ஒருத்தர் இன்று தமிழ்த் தலைமையின் போக்கைக் கண்டு பயபபடுவதாகச்சொன்னார்.
 இன்றும் நிழற்புலகளாக வலம் வரும தமிழ்த்தேசியத் தலைவர்கள் தமிழர்களை வைத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அரச சமபளத்தை வாங்கும் ஒரு ஆசிரியன் மாணவர்களுக்குக் கல்வி கொடுக்கும் பணியைச்செய்கிறான். வைத்தியர் நோயாளிகளைப் பராமரிக்கிறார்..அப்படியே, பல அசர உத்தியோகத்தர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்துக்கு ஏற்ப பணியை மக்களுக்குச் செய்கிறார்கள். அண்மையில் தேனியில் வந்த கட்டுரையின்படி ஒரு சாதாரண பாராளுமன்றவாதி மக்கள் பெயரால் எவ்வளவு உழைக்கிறார்கள் என்பது தெரிகிறது. இவர்கள் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்? புதைகுழிகளைத் தமிழ் நிலத்தில் வதைப்பதற்கு உதவி செய்தவர்கள் இவர்கள்.
 80 வயதை எட்டிக்கொண்டிருக்கும் தலைவர் கண்மூட, தலைமைப்பதவிக்கு இரு இளவரசர்கள் காத்திருக்கிறார்கள் மாவை என்பவர் எந்தவிதமான ஆளுமையும் கிடையாதவர். பிரேமச்சந்திரன் பிரபாகரனின் குணாம்சங்களைக் கொண்டவர் என்று பெயர் எடுத்தவர். அதாவது, தனக்குப் பிடிக்காத யாரையும் சரியாகப் பார்த்துக் கொள்வாராம். இப்படியான தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு ஒரு புதிய, தன்னலமற்ற தலைவர்கூட்டத்தைத் தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தலைவன் மகாசக்தியின் அனுக்கிரகம் பெற்றவர் என்பது நம்பிக்கை. தமிழ்த் தலைவர்களால் இதுவரை எங்கள் தமிழ் இனம் உலகில் மற்ற உந்த இனமும் படாத கொடிய அனுபவங்களைப் பெற்றிருக்கிறது. இந்தத் தலைவர்களுக்குப் பயந்து கடவுளும் ஓடி ஒளிந்து விட்டாரோ தெரியாது.
 'கடவுளாலும் மறக்கப்பட்டவர்களா தமிழர்கள்? ஏன் எங்கள் இனம் இப்படித் துன்பப் படுகிறது? என்றழுதார் ஒரு தமிழ் முதியவர்.

கருத்துகள் இல்லை: