புதன், 24 ஆகஸ்ட், 2011

இலங்கை தற்போது முன்னோக்கி பார்க்க வேண்டிய காலம்


பிரச்சினைகள் இலங்கைக்கு பின்னால் உள்ளது இலங்கை தற்போது முன்னோக்கி பார்க்க வேண்டிய காலம் என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வர தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-
நாங்கள் மனித வளங்கள், இயற்கை மற்றும் பிற பொருள் வளங்களை என அதிகமானவற்றை இழந்துவிட்டோம்.

இங்கு நான் நாங்கள் எனக் குறிப்பிட்டது இலங்கை வாழ் தமிழ்,சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை. அனைவருமே அவர்களது வளங்களில் ஒரு பகுதியினை இழந்துவிட்டனர்.
தற்போது சமாதானம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் சரியான பாதையில் சென்று உயர்வினை எட்டிப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

யுத்தத்தினால் இலங்கை பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய முடியவில்லை. இன்னமும் கூட மீள்கட்டுமாண பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால் அண்மைக்காலமாக சாத்தியமான பொருளாதார அபிவிருத்திகளை இலங்கை கண்டு வருகிறது. தமிழ் சிறுவர்கள் தெற்கு பகுதிகளுக்கு சென்று சிங்கள மக்களை சந்திக்கின்றனர்.

இதனால் அவர்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வுடன் கூடிய நட்பு ஏற்படுகிறது.

வடக்கில் தற்போது அனைத்து வசதிகளும் உண்டு. இலங்கையர்கள் அதிகம் புலம்பெயர்ந்து வாழும் நாடு கனடாவாக உள்ளது.

அவர்கள் நாட்டின் அபிவிருத்தியில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: