யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் யாழ் மக்களின் வாழ்வாதார நிலை குறித்து ஆராயும் முகமாக, பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று(ஆகஸ்ட்-25) யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ் விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தின் தற்போதய பாதுகாப்பு மற்றும் இடம்பெற்றுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் நிலமைளைநேரில் பாரவையிட்டார்.
யாழ் பாதுகாப்பு தலைமைய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, பாதுகாப்புச் செயலாளருக்கு இது விடமாகமும் விளக்கிக்கூறினார்.
பாதுகாப்புச் செயலாளர் முதலில், தில்லிப்பள்ளை "மஹஜன' கல்லூரியில் நிர்மானிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இதன் நிர்மானப் பணிகளுக்காக 24 மில்லியனுக்கு மேல்செலவாகும் என கணக்கிடப்பட்டிரு்க்கின்றது,இதற்க்கு பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவுடயவர்களின் நன்கொடை் உதவியும் பெறப்பட்டு நிர்மானவேலைகள் நடை பெறுகின்மை குறிப்பிடத்தக்கது.
அடுத்து, கீரிமலை மீன்பிடி கிராமத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர், மீனவர்களுடன் கலந்துறையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிந்துக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, காங்கேசன்துறை துறைமுகத்தின் விரிவாக்கல் திட்டத்தையும் நேரில் சென்று மேற்பார்வை செய்தார்.
இறுதியாக 90 ஏக்கரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் விவசாய கிராமத் திட்டத்தையும் பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார். இங்கு மரக்கறி வகைகள், பழங்கள், வெங்காயம் போன்ற பல பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு யாழ் சென்றுள்ள பாதுகாப்புச் செயலாளர், யாழ் கோட்டை, பருத்தித்துறை மற்றும் பல இடங்களையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக