புதன், 20 அக்டோபர், 2010

Delhi 2010 8000 கோடி ஊழல்: கில், ஜெய்ப்பால் ரெட்டி நீக்கம்?

Jaipal Reddy and MS Gillடெல்லி: ரூ 8000 கோடி காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் எம்எஸ்கில் மற்றும் ஜெய்பால் ரெட்டி ஆகியோர் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை ஒழுங்காகச் செய்யவில்லை என சில மூத்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீது கோபத்தில் உள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். இதனை அவர் வெளிப்படையாகவே காட்டியுள்ளார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளது பல அமைச்சர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி பாராளுமன்ற கூட்டம் தொடங்க உள்ளது. அதற்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றப்படும் என்று தெரியவந்துள்ளது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பெரும் அலட்சியம் காட்டியதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மீது பிரதமர் மன்மோகன்சிங் கோபத்தில் உள்ளார். அதுபோல போட்டி ஏற்பாடுகளை விரைந்து செய்ய உதவவில்லை என்று ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி மீதும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மேலும் காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை ரூ 8000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. முழு விவரமும் வெளியாகும்போது வேலும் சிலரது தலைகளும் உருளலாம் என்று தெரிகிறது.

அவர்கள் பதவி பறிக்கப்படலாம் அல்லது அவர்கள் இருவரும்
 
பதிவு செய்தவர்: மக்கள்
பதிவு செய்தது: 20 Oct 2010 5:12 pm
டைரக்டர் சங்கருக்கு கிடைத்தால் ௨ படம் எடுத்து மக்களிடம் 16000 கோடி சம்பதிபன் . அதை மக்களும் பார்த்து சூப்பர் அப்பு என்பார்கள்

பதிவு செய்தவர்: நவீனன்
பதிவு செய்தது: 20 Oct 2010 4:59 pm
அவர்கள் பதவி பறிக்கப்படலாம் அல்லது அவர்கள் இருவரும் வேறு இலாகாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது... எத்தனை நாள் ஒரே இலாகாவில் இருந்து கொள்ளை அடிப்பது

பதிவு செய்தவர்: citizen
பதிவு செய்தது: 20 Oct 2010 4:56 pm
பதவியை பறித்தால் மட்டும் போதுமா,அவர்கள் ஏறகனவே கோடிகளை சம்பாதிதிவிடர்கள்

பதிவு செய்தவர்: ஐயோ
பதிவு செய்தது: 20 Oct 2010 4:51 pm
ச்பெக்ட்ரும் வூழல் .70000 கோடி. என்னடா புடிங்கிநீங்க. பார்த்தல் மலர் கோது கொடுக்கிறாங்கள்

பதிவு செய்தவர்: அப்பாவி
பதிவு செய்தது: 20 Oct 2010 4:41 pm
அது என் (மக்கள்) பணம் தேவ.பசங்களா. இப்படி ஒத்ஹு ஒத்ஹு என்னடா பண்ண போறீங்க!!

பதிவு செய்தவர்: ஜெயலலிதா
பதிவு செய்தது: 20 Oct 2010 2:39 pm
அது என் முடக்கு சமம்

பதிவு செய்தவர்: கருணாநிதி
பதிவு செய்தது: 20 Oct 2010 2:32 pm
இது எனக்கு டீ சாப்பிடற காசு.
பதிவு செய்தவர்: ஹி ஹி
பதிவு செய்தது: 20 Oct 2010 4:11 pm
டீ சாப்பிட நீ எப்போ தாத்தா காசு செலவு பண்ணினே. எல்லாம் ஓசி தானே!

பதிவு செய்தவர்: ஊழல் பெருச்சாளி
பதிவு செய்தது: 20 Oct 2010 2:28 pm
8000 கோடி - மொத்த தமிழ்நாட்டையே படித்த மாநிலமாக மாற்றிவிடலாம்... எல்லா கிராமத்திலும் வேலை வாய்ப்பு பெருக்கலாம்... எங்கயோ கொண்டு சென்றிருக்கலாம்...

பதிவு செய்தவர்: மு க
பதிவு செய்தது: 20 Oct 2010 2:23 pm
ச.. வட போச்சே! முன்னமே therinchirundha ராசா அல்லது பாலு வ களம் இருகிருகலமே! ச

பதிவு செய்தவர்: pothujanam
பதிவு செய்தது: 20 Oct 2010 2:21 pm
avlo panatha engada vachirukkinga...... engaluku kudiyirukka oru veedu kooda illayeda.......

கருத்துகள் இல்லை: