செவ்வாய், 19 அக்டோபர், 2010

மண்முனை - கொக்கடிச்சோலை வாவியூடாக பாலம் அமைக்க கோரிக்கை


100 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் மண்முனை- கொக்கடிச்சோலை வாவியுடான படகுப் பாதைக்குப் பதிலாக குறித்த நீர்வழியூடாக பாலம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 1 கிலோ மீற்றர் நீளமுள்ள இவ் நீர் வழிப்பாதையூடாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அரச ஊழியர்களும் படகுப்பாதையுடாகவே பலவேறு சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்து வருகின்றனர். இவ்வழியுடாக பாலம் அமைப்பதற்கு பல அரசியல் வாதிகள் பலமுறை அடிக்கல்நாட்டியுள்ளனர் ஆனால் கடந்த பல தசாப்தங்களாக பாலம் அமைக்கப்படவேயில்லை. கிழக்கு உதயத்தின் கீழாவது படகுப் பாதைக்குப்பதிலாக பாலம் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு பண்ணைப் பாலம், திருகோணமலைக்கு கிண்ணியா பாலம்,  வன்னி - யாழ்ப்பாணத்திற்கு சங்குப்பிட்டிப்பாலம் போன்றவை எவ்வளவு முக்கிமானவையோ அவ்வளவு முக்கிமானது மண்முனை - கொக்கடிச்சோலை பாலம்.

கருத்துகள் இல்லை: