எம்.வி. சண் சீ கப்பலில் கனேடிய பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக வருகை தந்தவர்களில் ஏற்கனவே பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து மனு நிராகரிக்கப்பட்டவர்களும் அடங்கியுள்ளனர். இந்த தகவலை கனேடிய குடிவரவு துறை அமைச்சர் ஜேசன் கென்னி வெளியிட்டுள்ளார். |
தற்போது சட்ட விரோதமாக கனடாவிற்கு பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குடிவரவு சட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். சில அகதிகள் தமது அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படு;ம் போது ஏனைய நாடுகளை அணுகுவதாக அவர் குற்றச்சாட்டி உள்ளார். எப்படியிருப்பினும் கனேடிய சட்டங்களுக்கு அமைய, அகதி விண்ணப்பங்கள் ஏனைய நாடுகளினால் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் அதனை நிராகரிப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் விளக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆதரவாக கனடா கைச்சாத்திட்டுள்ளதாகவும் அகதிகளின் நலன்கள் குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. |
சனி, 23 அக்டோபர், 2010
பிரிட்டனில் புகலிட மனு நிராகரிக்கப்பட்டவர்களும் எம்.வி. சண் சீ கப்பலில் கனடா வந்துள்ளனர்: ஜேசன் கென்னி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக