பிரித்தானியர் காலத்து மலையக றப்பர் உற்பத்தி மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கின் வெப்ப வலயங்களுக்கும் விருத்தி செய்யப்படவுள்ளது. வடக்கில் றப்பர் உற்பத்தியை ஊக்குவிக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னர் மலைநாட்டுப் பகுதியில் மட்டும் என வரையறுக்கப்பட்டடிருந்த றப்பர் மரக்கன்றுகளை வவுனியா, முல்லைத்தீவு போன்ற இடங்களில் நடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதற்குத் தேவையான வழிகாட்டல்களை றப்பர் ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக