கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள்ளிருந்து பெருந்தொகையான அபின் பைக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. |
களுவாஞ்சிக்குடி பொலிசாரால் கைப்பற்றப்பட்ட அபின் பைக்கற்றுகளின் எண்ணிக்கை 5500க்கும் அதிகம் என்று தெரிய வருகின்றது. அதன் பெறுமதி 1,37,500 என்றும் தெரிய வருகின்றது. அபின் பைக்கற்றுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாத்தறையிலிருந்து பொலநறுவைக்குப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 800 ஹெரோயின் பைக்கற்றுகளை இன்று அதிகாலையில் கலேவெலைப் பொலிசார் கைப்பற்றியிருந்தனர். பஸ்ஸின் நடத்துனரே ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபடும் நோக்கில் அதனை எடுத்துச் சென்றமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் நடத்துனருடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். |
சனி, 23 அக்டோபர், 2010
கல்முனையில் பெருந்தொகையான அபின் பைக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக