இறுதியுத்த காலப்பகுதியில் வன்னிப் பகுதியில் கடமையாற்றிய வைத்திய அதிகாரிகள் 4 பேர் அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சிய மளிக்கவுள்ளனர். வைத்திய அதிகாரிகளான வி. சண்கராஜா,ரி . சத்தியமூர்த்தி, சிவபாலன், ரி.வரதராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு சாட்சியமளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமாதம் 19ஆம் திகதி வைத்திய அதிகாகளான சண்கராஜா, சத்தியர்த்தி ஆகியோரும் 24ஆம் திகதி சிவபாலனும் 30ஆம் திகதி வரதராஜனும் சாட்சியமளிக்கவுள்ளனர். இறுதி யுத்த காலப்பகுதியில் வன்னிப் பகுதியில் கடமையாற்றிய இவர்கள் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த போது குற்றப்புலனாய்வுப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை யுத்தகாலத்தின்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியவரும் தற்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றி வருபவருமான இமெல்டா சுகுமார் எதிர்வரும் 4ஆம் திகதி நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக