தனது பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு உத்தியாக சவூதி அரேபியாவுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் பெறு மான ஆயுத விற்பனையைச் செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆயுதங்களில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் அடங்கும். இது குறித்து அமெரிக்க அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், ஒப்பந்தம் தொடர் பான விபரங்கள் நாடாளு மன்றத்திற்கு அனுப்பப்பட் டுள்ளன. அதில் ஆட்சே பணை எதுவும் தெரிவிக்க வேண்டுமென்றால் 30 நாட்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி யுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடை முறைக்கு வந்தால் அமெ ரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய ஆயுத விற்பனையாக இருக்கும். மேலும் தவறான கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி யால் லட்சக்கணக்கானவர் கள் அமெரிக்காவில் வேலை யிழந்துள்ளனர். இந்த ஒப் பந்தத்தால் 75 ஆயிரம் பேரின் வேலையைப் பாது காக்க முடியும். அமெரிக்க நாடாளுமன்றம் எந்தவித ஆட்சேபணையும் செய் யாது என்பதோடு, அமெ ரிக்காவின் அரவணைப்பில் இருக்கும் இஸ்ரேலும் வாய் மூடி மவுனமாகவே இருக் கப்போகிறது.
அரேபியப் பகுதி மற் றும் மேற்கு ஆசியா ஆகிய வற்றின் பாதுகாப்புக்காக நாங்கள் எவ்வளவு பாடு படுகிறோம் என்பதை உல கம் புரிந்து கொள்ளும் என்று அமெரிக்க அரசு அதிகாரியான ஆண்ட்ரூ ஷாபிரோ சரடு விட்டுள் ளார். 80 எப்-15 போர் விமா னங்கள், பல அபாசே, பிளாக் ஹாக் மற்றும் லிட்டில் பேர்டு ஹெலிகாப்டர்களும் சவூதி அரேபியாவின் தலை யில் கட்டப்படுகின்றன. இவற்றோடு லேசர் உதவி யால் செலுத்தப்படும் வெடி குண்டுகளும் அடங்கும்.
இத்தகைய ஆயுத விற் பனை நடக்கப்போவதாகக் கடந்த மாதம் செய்திகள் கசிந்தன. தற்போது அது வெறும் வதந்தியல்ல, உண் மையான செய்திதான் என் பது உறுதியாகியுள்ளது. முதலில் பாதிப்பணத்திற் கான ஆயுதங்களை சவூதி அரேபியா வாங்கிக் கொள் ளப்போகிறது. இந்த ஆயுத விற்பனை 20 ஆண்டுகளுக் குள் நிறைவு பெற்றுவிடும் என்பது தற்போதைய நிலைமை.
கச்சா எண்ணெய் வளத் தால் கொழிக்கும் சவூதி அரேபியாவுக்கு இந்த அள வுக்கு “பாதுகாப்பு” தேவைப் படுகிறதா என்று மேற்கு ஆசியா நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வரும் அரசியல் வல்லுநர்கள் தெரி விக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக