கனடாவுக்கு எம்.வி.சன்.சி கப்பலில் சென்ற இலங்கை அகதிகளின் ஒரு தம்பதிக்கு அடுத்த மாதம் 25 ஆம் திகதியளவில் குழந்தை ஒன்று பிறக்கவுள்ளது. குழந்தையைப் பிரசவிக்கவுள்ள இநதப் பெண் ஒரு சிறையிலும் அவரது கணவன் மற்றொரு சிறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சிறையில் குழந்தையை பெற்றெடுக்கின்றமைக்கான வசதிகள் எதுவும் இல்லையென்றும் இதனால் பிரசவம் சிறையில் இடம்பெற்றால் தாய்க்கோ, சிசுவுக்கோ ஆபத்து நேரலாம் என்றும் இக்கர்ப்பிணிப் பெண்ணின் சட்டத்தரணியான மாலினி ஜொனி சியஸ் தெரிவித்துள்ளார்.
கனடா எல்லைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் இதுவரை எம்.வி. சன்சி பயணிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை. இதன் காரணமாக அனைத்துப் பயணிகளுமே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் பயணிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளின் போது இப்பெண்ணுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவரது சட்டத்தரணி அதிகாரிகளைக் கேட்டுள்ளார். அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மூன்றாம் தடவையாக அடுத்த மாதம் 17 ஆம் திகதி இந்தப் பெண்ணை விசாரிக்க உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
பிறக்க இருக்கும் குழந்தை கனேடிய பிரஜை என்கிற அந்தஸ்தை எம்.வி.சன்சி பயணிகளுக்கு முன்பாகவே பெற்றுவிடும் என்றும் இக்குழந்தை காரணமாக தாய்க்கும் மனிதாபிமான அடிப்படையில் கனேடிய பிரஜாவுமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றார் சட்டத்தரணி.
எறிகணைக் காயங்களுடன் எம்.வி.சன் சி பெண் பயணி
கனடா சென்ற எம்.வி.சன் சி கப்பல் பயணிகளில் பெண்ணொருவர் எறிகணைத் தாக்குதலில் காலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக மிகவும் அவதியுறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய சிகிச்சை வழங்கப்படாமையால் அந்த இளம் யுவதியின் காயத்தில் பாரதூரமான கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.
கனடா சென்ற எம்.வி.சன் சி கப்பல் பயணிகளில் பெண்ணொருவர் எறிகணைத் தாக்குதலில் காலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக மிகவும் அவதியுறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய சிகிச்சை வழங்கப்படாமையால் அந்த இளம் யுவதியின் காயத்தில் பாரதூரமான கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.
தான் இலங்கையிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும், பின்னர், தான் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக சிகிச்சை பெறாமலேயே திரும்பி வந்து விட்டதாகவும் கனேடிய அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்துள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக