யோகா காப்புரிமைக்கு எதிர்ப்பு
யோகா திருட்டு என்று தாங்கள் வருணிக்கும் ஒரு விஷயத்தைத் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான ஆசனப் பயிற்சிகளை விளக்கும் வீடியோ தொகுப்பு ஒன்றை இந்திய அரசாங்கம் சர்வதேச அறிவுசார் காப்புரிமை பதிவகத்திடம் வழங்கவுள்ளது.
இந்தியப் பாரம்பரியத்தில் வருகின்ற யோகா பயிற்சியை அமெரிக்காவில் சில நிறுவனங்கள் தங்களுடைய வடிவத்துக்கு மாற்றி அவற்றுக்கு காப்புரிமை பெற முயலுகின்றன என்று கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை வருகிறது.
ஆனால் யோகா என்பது மானுடம் மொத்தமும் பகிர்ந்துகொள்ள வேண்டிய விடயம் என்று இந்தியா கருதுகிறது.
யோகா என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது. உடல் நலத்தைப் பேணுவதற்கான ஒரு கருவியாக அமெரிக்காவிலும் இது சில காலமாக பிரசித்தி பெற்று வருகிறது. அங்கே சில நிறுவனங்கள் யோகத்தின் சில ஆசனங்களிலும் பயிற்சிகளிலும் தங்களது வடிவமைப்பைச் சேர்த்து அது தங்களுடையதுதான் என்பதாக அறிவுசார் காப்புரிமை பெற முயற்சித்துள்ளன.
ஆனால் நாய் சோம்பல் முறிப்பது போன்றது மாதிரியான அதோ முக ஸ்வநாசனா, சூரிய நமஸ்காரம் மற்றும் பிற ஆசனப் பயிற்சிகள் எல்லாம் உலகத்துக்கு பொதுவான அறிவுத் தொகுதியின் ஒரு அங்கம் அவற்றுக்கு எல்லாம் எந்த ஒரு நிறுவனமும் உரிமை கோர முடியாது என்று இந்தியாவின் பாரம்பரிய ஞானத்துக்கான டிஜிட்டல் கருவூலகம் தெரிவிக்கிறது.
யோகப் பயிற்சியின் பிரபலமான ஆசனங்களையெல்லாம் வல்லுநர்கள் குழுவொன்றை வைத்து செய்யச் சொல்லி அதனை வீடியோ படமெடுத்து தொகுத்து, அந்த ஆசனங்களை மற்றவர்கள் அபகரித்துச் செல்வதைத் தடுக்கும் நோக்கிலான பணிகள் நடந்துவருகின்றன.
அமெரிக்காவில் மட்டுமே அறுநூறு கோடி டாலர்கள் மதிப்புடைய ஒரு தொழில் துறையாக யோகாப் பயிற்சி தொழிதுறை வளர்ந்துள்ளது. ஆகவே இந்திய பாரம்பரிய ஞானத்துக்கான டிஜிட்டல் கருவூலம் என்ற அமைப்பு பெரிய பெரிய ஆட்களையெல்லாம் எதிர்க்க வேண்டி வரும். ஆனால் அந்த அமைப்புக்கு இதெல்லாம் பழகிப் போயிருக்கும் ஏனென்றால், மூலிகை வைத்திய முறைகளுக்கு சில நிறுவனங்கள் காப்புரிமை வாங்கியிருந்ததை இந்த அமைப்பு அண்மையில் வெற்றிகரமாக ரத்து செய்ய வைத்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக