ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

கமல்,பெரியார் பெயர் வைத்த பிள்ளை செய்திருக்கும் இந்த வேலை

பெரியார் பெயர் வைத்த பிள்ளை செய்திருக்கும் இந்த வேலை:
நடிகர் கமல் பேச்சு


பிரபல எழுத்தாளர் நீல பத்மநாபன் எழுதிய `தலைமுறைகள்' என்ற நாவல், `மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி இருக்கிறது.
இந்த படத்தில் கவுதமன் கதாநாயகனாக நடித்து, படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

சீமான், முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். அதிர்வு திரைப்பட்டறை சார்பில் த.மணிவண்ணன் தயாரித்துள்ளார்.
நாவலை படமாக்கியதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர்,   ‘’நாட்டின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றான `தலைமுறைகள்,' மகிழ்ச்சியுடன் திரைப்படமாக வெளிவருகிறது, `மகிழ்ச்சியாக.' இந்த படத்தின் இயக்குனர் கவுதமன், படத்தின் கதாநாயகனும் கூட. கவுதமன் என்ற பெயரை இவருக்கு வைத்தவர், பெரியார்.

பெரியார் பெயர் வைத்த பிள்ளை செய்திருக்கும் இந்த வேலை பாராட்டுக்குரியது. இந்த மாதிரி தமிழ் பிள்ளைகள் எல்லா துறைகளிலும் வரவேண்டும் என்ற கனவு பெரியாருக்கு இருந்தது. அந்த கனவை நினைவில் கொண்டு, கவுதமன் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் பவனி வருகிறார்.

என்னைப்போல் சினிமாவை சார்ந்து இலக்கியத்தை நேசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இலக்கியத்துக்கும், சினிமாவுக்கும், முக்கியமாக தமிழ் சினிமாவுக்கும், இலக்கியத்துக்கும் ஏற்பட்டுவிட்ட அகண்ட இடைவெளிக்கு பாலமாக சிலர் அமையவேண்டும் என்று 30 வருடங்களுக்கு முன்பே கோபமாக பேசிய இளைஞர்களில் நானும் ஒருவன்.

ஆனால், இன்றும் அதே நிலை தொடர்கிறது. அப்படிப்பட்ட இந்த வறண்ட சூழ்நிலையில், இந்த மாதிரி நிகழ்வுகள் ரொம்ப முக்கியமான நிகழ்வுகள். ஒரு புதிய சுழற்சியின் ஆரம்பம் என்று நினைக்கிறேன். இதற்கு வாழ்த்து சொல்வது என் தகுதியினால் அல்ல. என்னுடைய ஆசைகளினால்.
எப்படிப்பட்ட தமிழ் சினிமாவை உருவாக்க வேண்டும், எத்தகைய அஸ்திவாரங்களுடன் அவை அடியெடுத்து வைக்க வேண்டும் என்று கனவுகளுடன் இருந்த தமிழ் சினிமா ரசிகர்களில், நானும் ஒருவன்.

பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் ஒரு சுழற்சியை, ஒரு மறுபிறப்பை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த மாதிரி சூழலில், இந்த மாதிரி முயற்சிகள் முதலில் பாராட்டப்பட வெண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: