ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

திருமலை நகரசபை பதவியில் இருந்து நகரசபை தலைவர் கௌரி முகுந்தன் இடை நிறுத்தம்!

rincomalee Urban Council (UC) Chairman Mr. S. Gauwri Muhandan has been removed from his post with immediate effect by the Chief Minister of the Eastern Provincial Council, S. Chandrakanthan alias Pillayan pending fraud investigations.
 
When contacted the Urban Council Chairman stated that he has been informed of his removal, but there was no truth to the fraud allegations and that he will take this matter to court. (Daily Mirror online)


திருமலை நகரசபைத் தலைவர் சண்முகராஜா கௌரிமுகுந்தன் அப்பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். கௌரி முகுந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை நகரசபைத் தலைவரின் பொறுப்புகளை உபதலைவர் கா.செல்வராசாவிடம் 3 மாத காலத்திற்கு கையளிக்குமாறு நகரசபைத் தலைவர் கௌரி முகுந்தனை முதலமைச்சர் சந்திரகாந்தன் பணித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு திருமலை நகரசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கௌரிமுகுந்தன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதனால், அவரை கட்சியலிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக த.தே.கூ. அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: