இலங்கை அதிபர் ராஜபக்சே அடுத்த மாதம் 15-ம் தேதி ஐநா சபையில் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு எதிராக போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் ஐநாவில் பேசுவாரா என்கிற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், அவர் உரையாற்றவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ராஜபக்சே வருகையின்போது நியூயார்க் நகரில் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக