ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா l அதானி-அம்பானி மட்டும் சம்பாதித்தால் மக்களுக்கு என்ன பயன் ?

 கலைஞர் செய்திகள்  - Praveen : "அதானி-அம்பானி மட்டும் சம்பாதித்தால் மக்களுக்கு என்ன பயன் ?" காட்டமாக விமர்சித்த கர்நாடக முதல்வர் !
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.



காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். அதன்பின்னர் பாஜக ஆட்சியில் இந்துத்துவ சிந்தனையோடு கொண்டுவந்த பல்வேறு நடைமுறைகளிலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
"அதானி-அம்பானி மட்டும் சம்பாதித்தால் மக்களுக்கு என்ன பயன் ?" -காட்டமாக விமர்சித்த கர்நாடக முதல்வர் !

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அதானி-அம்பானி மட்டும் சம்பாதித்தால், சாதாரண மக்களுக்கு எவ்விதப் பயனும் இருக்காது என காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், " நாட்டின் பணம் உழைக்கும் மக்களிடம் பணம் இருந்தால் மட்டுமே அது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பயன்படும். அதை விடுத்து அந்த பணம், வெறும் அதானி-அம்பானியிடம் மட்டும் இருந்தால் அதனால் எந்த பலனும் இருக்காது.

இதனால் நாங்கள் ஆட்சி அமைத்ததும், திட்டங்களைச் செயல்படுத்தி, சாதாரண மக்களிடம் பணத்தை வழங்கியுள்ளோம். அதானி-அம்பானி மட்டும் சம்பாதிக்க வழிவகுக்கும் பாஜகவினரை ஆட்சியில் அமரவைத்துவிட்டு, ஏழைகள், நடுத்தர மக்கள் முன்னேற வேண்டுமானால் அது சாத்தியமற்றது. ஆகவே மக்களை முன்னுறுத்தி எங்கள் அரசு திட்டங்களை கொண்டுவருகிறது" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: