வியாழன், 31 ஆகஸ்ட், 2023

சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு-மருத்துவ மனையில் (விஜயலட்சுமி ஜுரம்) விஜயலட்சுமியிடம் போலீஸ் விசாரணை!

tamil.oneindia.com  - Mathivanan Maran  : விஜயலட்சுமியிடம் போலீஸ் விசாரணை! பல்லடத்தில் சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு- ஹாஸ்பிடலில் அனுமதி
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் உடநலக் குறைவால் பல்லடம் அருகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சீமான் மீதான புகார் குறித்து சென்னையில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது திருமண மோசடி புகார் கொடுத்திருந்தார்.
அதில் 2008-ம் ஆண்டு சீமானுக்கும் தமக்கும் மதுரையில் திருமணம் நடந்த்து தொடங்கி சீமான் ஏமாற்றியது எப்படி என்பது வரை விரிவாக விவரித்திருந்தார் விஜயலட்சுமி.

சீமான் மீது ஏற்கனவே விஜயலட்சுமி போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து பெங்களூர் சென்று அங்கிருந்தபடியே சீமான் மீது பல்வேறு புகார்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார் விஜயலட்சுமி.

இந்நிலையில்தான் திடீரென சென்னை வந்த விஜயலட்சுமி, போலீசில் சீமான் மீது புகார் கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை ராமாபுரம் காவல் நிலையத்துக்கு விஜயலட்சுமி வரவழைக்கப்பட்டார். அவரிடம் கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள் விசாரணை நடத்தினார்.

திருமண மோசடி புகாரில் கைதாகிறாரா ’நாம் தமிழர்’ சீமான்? நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸ் தீவிர விசாரணை! திருமண மோசடி புகாரில் கைதாகிறாரா ’நாம் தமிழர்’ சீமான்? நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

இதனிடையே கோவை பல்லடம் அருகே போராட்டம் ஒன்றில் பங்கேற்பதாக சீமான் அறிவித்திருந்தார். அப்போராட்டத்துக்கு செல்வதற்கு முன்பாக சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சீமான் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்ற போது அதே இடத்தில் சீமான் அப்படியே மயங்கி சரிந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Naam Tamilar Chief Co-ordinator Seeman hashospitalised near Coimbatore today.
 

கருத்துகள் இல்லை: