tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த நடிகை விஜயலட்சுமி, சீமானின் அரை நிர்வாண வீடியோ பற்றி பகீர் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், "சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நீதிமன்றம் சென்ற முடிக்கப்படவில்லை. அது இன்னும் இருக்கிறது. சீமான் என்னுடன் அரை நிர்வாணமாக இருந்த வீடியோக்களை காட்டி உள்ளேன். அதற்கு அவர் என்ன பதிலளிக்க உள்ளார். வீடியோ அவர் மனைவி என பேசியுள்ளார்.
I have Seeman Half nude video - Actress Vijayalakshmi blasts
சீமானை கைது செய்ய வைத்து காட்டுகிறோம். நானும் வீரலட்சுமியின் இந்த தமிழ் மண்ணின் பெண்கள். இது 2 மணி நேர படம் இல்லை. இதில் என்ன தவறு இருக்கும் என்று பார்க்க. இது வாழ்க்கை. இது இப்படித்தான் தப்பு தப்பாக இருக்கும்.
யாருக்கு சீமான் வேண்டும் என்று பயம் இருக்கிறதோ, தயவு செய்து விட்டுவிடுங்கள். இங்கு ஒரு சண்டை வந்ததுபோது காட்டாதீர்கள். சீமானுக்கு திருமணம் நடக்கும்போது நான் தூங்கிக்கொண்டு இருந்தேன். எங்கு போய் இருந்தீர்கள் என்பது என்ன கேள்வி? நாங்கள் காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டிய நிலையை சீமான் ஏற்படுத்தி இருக்கிறார்.
சிம்பு நடித்த படத்தில் நடித்த நடிகர் வடிவேலுவின் தம்பி! ஜெகதீசன் உடலுக்கு வைகைப்புயல் கண்ணீர் அஞ்சலிசிம்பு நடித்த படத்தில் நடித்த நடிகர் வடிவேலுவின் தம்பி! ஜெகதீசன் உடலுக்கு வைகைப்புயல் கண்ணீர் அஞ்சலி
இன்று காலை கேட்கிறார். விஜயலட்சுமி பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் என்று. ஏன் உனக்கு தொண்டை இல்லையா பேசுவதற்கு? நீ ஒரு பெண்ணுடன் வாழ்கிறாய்தானே. இன்று நாங்கள் எவ்வளவு நொந்துபோய் இங்கு வந்து நிற்கிறோம். நாங்கள் விளம்பரத்துக்காக வந்திருக்கிறோம் என்று நினைக்காதீர்கள்.
மதுரை செல்வத்தை வைத்து அவர் பேசுகிறார். எனக்கு ஒரே ஒரு ஆடியோதான் சீமான் தரப்பிடம் இருந்து வந்தது. நான் உறுதிப்படுத்த தினமும் சீமானுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். சீமான் எனக்கு கொடுக்கவில்லை. அதைதான் நாங்கள் போட்டு இருக்கிறோம். ஒரு கோடியெல்லாம் கொடுக்கவில்லை.
எனக்கு மூன்றரை லட்சம் கொடுத்ததற்கு முழு ஆவணங்கள் உள்ளன. நாங்கள் சும்மா விடப்போவது இல்லை. அவரை கைது செய்ய வைப்போம். அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. என்னிடம் சமர பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. தற்போது போராடும் நிலைக்கு திமுக அரசும் காவல்துறையும் எங்களை வைக்காது என்று நம்புகிறேன்." என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக