இம்முறை இயேசு வருவது பாஜகவின் உபயத்தில்தான். நெடுமாறனின் இயேசு வரவோடு மக்கள் நல் கூட்டணி பார்ட் 2 உருவாக கூடும். இனி வரும் தேர்தல்களில் சில பழைய மநகூக்கள் பாஜகவுக்கு பல்லக்கு தூக்க இயேசு வருகிறார் சுலோகம் உதவும்ன்னு கணக்கு பண்ணுவது போலத்தான் தெரிகிறது.
மாலை மலர்: தவறான தகவல்களை வெளியிடுகின்றார்கள். எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக பழ நெடுமாறன் கூறிய தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.
டி.என்.ஏ ஆதாரங்களையும் நாங்கள் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட போரில் அவர் கொல்லப்பட்டார்.
தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள்.
இது எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக