tamil.oneindia.com Hemavandhana : "மர்மதேசம்".. பெண்கள் உடம்பெல்லாம் தழும்பு.. கட்டிவைத்தும், குரங்கை ஏவியும் சீரழிப்பு.. நம்ம ஊர்லதான்
விழுப்புரம்: ஆசிரமம் ஒன்றிற்குள், ஆதரவற்ற பெண்கள் மீது வளர்ப்பு குரங்குகளை ஏவி விட்டு கடிக்க வைத்தும், போதை பொருளை தந்து அவர்களை பலாத்காரமும் செய்து வந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது..
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ளது குண்டலபுலியூர்.. இங்கு அன்பு ஜோதி என்ற ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது.. இந்த ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆசிரமத்திற்கு சலீம்கான் என்ற அமெரிக்க வாழ் தமிழர் கடந்த 2021 டிசம்பர் மாதம் வந்துள்ளார்.. தன்னுடைய மாமனார் ஜவஹிருல்லாவை அழைத்து வந்து இந்த ஆசிரமத்தில் அப்போது சேர்த்துள்ளார்.
மாமனார்
இதற்கு பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம், மாமாவை சந்திக்க மறுபடியும் சலீம் அந்த ஆசிரமத்திற்கு வந்துள்ளார்.. ஆனால், ஜவஹிருல்லா ஆசிரமத்தில் காணோம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த சலீம் ஆசிரம நிர்வாகிகளிடம், தன்னுடைய மாமா எங்கே என்று கேட்டுள்ளார்.. ஆனால், அதற்கு ஆசிரமத்தில் சரியான பதிலை சொல்லவில்லை என தெரிகிறது.. இதனால், கடுமையான மனவருத்தத்துக்கு ஆளான சலீம், ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு கொண்டுவந்தார். எனவே, நீதிமன்ற உத்தரவையடுத்து அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு போலீசாரும், வருவாய் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கடந்த 10ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்..
பிபிசி அலுவலகத்தில் சோதனை.. குரல்வளையை நெறிக்கும் செயல்.. மக்கள் நீதி மய்யம் கண்டனம் பிபிசி அலுவலகத்தில் சோதனை.. குரல்வளையை நெறிக்கும் செயல்.. மக்கள் நீதி மய்யம் கண்டனம்
பராமரிப்பு
அப்போதுதான், சோதனையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அந்த ஆசிரமமே, உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருகிறதாம்.. அதுமட்டுமல்ல, ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் உரிய முறையில் பராமரிக்காமல் சங்கிலியால் கட்டப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.. இதைவிட கொடுமை, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் பதறிப்போனார்கள்.. இதற்கு பிறகு, சமூக நல அலுவலர் ராஜாம்பாள் இது தொடர்பாக புகார் தந்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்.18-ல் மதுரை வருகை- பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி கோவிலில் ஆய்வு! ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்.18-ல் மதுரை வருகை- பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி கோவிலில் ஆய்வு!
குரங்குகள்
அந்த புகாரின் அடிப்படையில், ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலும் ஆசிரம மேஜேனர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது... மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அன்பு ஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைக்கவும், அபராதம் விதிக்கவும் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு பகீர் வெடித்து கிளம்பி உள்ளது.. இந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களில் 16 பேரை காணவில்லையாம்.. அதுமடுமல்ல, இந்த ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது..
நோ எக்ஸாம்.. மாதஊதியம் ரூ.50,000.. 8 முடித்தாலே போதும்..தமிழக இந்து அறநிலையத்துறையில் சூப்பர் வேலைநோ எக்ஸாம்.. மாதஊதியம் ரூ.50,000.. 8 முடித்தாலே போதும்..தமிழக இந்து அறநிலையத்துறையில் சூப்பர் வேலை
ஆதரவற்றோர்
இந்த ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்களை, இந்த குரங்குகள் கடித்து குதறியும் வந்திருக்கிறது.. இங்கு தங்கியுள்ளவர்கள் பெரும்பாலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், குரங்குகளை ஏவிவிட்டு கடிக்க வைத்துள்ளார்கள் என்பதும் உறுதி ஆகியுள்ளது. அதனால், குரங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
லைசென்ஸ்
இதனையடுத்து ஆசிரமத்தில் உள்ளவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல விருப்பப்படுபவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டும் வருகின்றனர். மேலும் ஆதரவற்றோர்களை வேறு காப்பகங்களுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அன்பு ஜோதி ஆசிரமம் 17 வருடங்களாக இயங்கி வருகிறாம்.. 17 வருடங்களாகவே லைசென்ஸ் கிடையாதாம்.. இந்த ஆசிரமத்தின் பிரதான பணி என்னவென்றால், சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோரை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
காணோம் மாமாவை
அதனால்தான், இதையெல்லாம் கேள்விப்பட்டு சலீம், தன்னுடைய மாமனாரை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்... கடந்த ஆகஸ்ட் மாதம் வந்து, மாமனார் எங்கே என்று கேட்டதற்கு, ஆசிரமத்தில் இடப்பற்றாக்குறை என்பதால், 53 பேரை பெங்களூருவில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பிவிட்டோம் என்றார்களாம்.. அதனால் பெங்களூர் சென்று பார்த்தால், அங்கேயும் மாமனாரை காணவில்லை.. மாமனாருடன் சேர்த்து 16 பேரும் அந்த ஆசிரமத்தில் காணாமல் போயிருந்தனர்.. அதனால்தான் கோர்ட்டுக்கு சென்றுள்ளார் சலீம்.
10 பேருக்கு கடி
இந்த ஆசிரமத்தின் ஓனர் ஜீபின், நிறைய குரங்குகளை வளர்த்து வந்துள்ள நிலையில், சமீபத்தில் அதில் 2 குரங்குகளை திறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த குரங்குகள் ஆசிரமத்திலிருந்த 10 பேரையுமே கடித்திருக்கின்றன.. இதனால் அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் உட்பட பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.. குரங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் சிகிச்சையும் தந்துள்ளனர்.. இந்த விவகாரம் பொிதான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேரடியாகவே வந்து புகார் தந்தார்..
கைது நடவடிக்கை
அந்த புகாரின்படி, ஆசிரம உரிமையாளர் உட்பட 8 பேர்மீது சுமார் 12 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, நான்கு பேர் (பிஜ் மோகன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன்) கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் அங்கிருந்த 2 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தகவல் வெளியான நிலையில், ஆசிரமத்தின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் 17 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆசிரமத்தில் இருந்து இப்போதைக்கு 142 பேரை மீட்டுள்ளனர். அங்கு தங்கியிருந்தவர்களில் 86 பேர் சிகிச்சை முடிந்து வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... மேலும் அனுமதி பெறாமல் இயங்கி வந்த தனியார் ஆசிரமத்தை மூடுவதற்கு மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பரிதாப பெண்கள்
இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. பெண்கள் பலர் போதை மருந்து கொடுத்தே பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்களாம்.. கற்பழிக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான புகார்கள் கூறப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், இப்படி பாதிக்கப்பட்டுள்ளார்.. "தமிழகத்துக்கு வேலைக்காக வந்தேன். விழுப்புரத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திவந்தேன். சிலர் என்னை மீட்டு, இந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்தனர். 5 ஆண்டுகள் இந்த ஆசிரமத்திலேயே தங்கி இருந்தேன். என்னை சங்கிலியால் கட்டி வைத்து போதை பொருள் கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்" என்று அந்த பெண்ணே அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். அதனால்தான், விசாரணை துரிதமாக துவங்கினார்களாம்.
மர்மதேசம்
இந்த ஆசிரமத்தில் மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்றோரின் உடல்களில் காயங்கள் தடிப்பு தடிப்பாக இருந்துள்ளன. இவைகளை எல்லாம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்... இந்த காயங்கள் குரங்குகள் கடித்ததால் மட்டும் ஏற்பட்டதா? இல்லை வேறு வகையில் சித்ரவதை செய்யப்பட்டதால் நிகழ்ந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்... "மர்ம தேசம் போல இந்த ஆசிரமம் செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுவதால், பல தகவல்கள் இனி மேலும் வெளியாகலாம் என்கிறார்கள்.
Heartbreaking incident in Vizhuppuram Ashram and 150 people were rescued
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக