மாலைமலர் : புதுடெல்லி: கடந்த 14-ந்தேதி டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.
இந்த நிலையில் பி.பி.சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கணக்கில் காட்டிய வருவாயும், பிபிசி நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
டிவி, டிஜிட்டல், ரேடியோ என பிபிசி செய்திகள் மூலம் வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்றும் ஆய்வின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக