வியாழன், 16 பிப்ரவரி, 2023

ஈரோட்டில் திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்!

மின்னம்பலம் -Kalai : ஈரோட்டில் திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்!
ஈரோட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி அமைக்கப்பட்ட பணிமனைகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் முன் அனுமதி பெறாமல் தேர்தல் பணிமனைகள் இயங்கி வருவதாக இரு தினங்களுக்கு முன்பாக அதிமுகவினர் புகார் மனுக்களை அனுப்பி இருந்தனர்.
இதன் பேரில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர்.
இதன் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 14 தேர்தல் பணிமனைகள் சீல் வைக்கப்படுகின்றன.


இதில் 10 திமுக தேர்தல் பணிமனைகளும், 4 அதிமுக பணிமனைகளும் சீல் வைக்கும் பணியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சென்று சீல் வைத்து வருகின்றனர்.

இதேபோன்று தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் நேற்று ஒரே நாளில் 14 வழக்குகள் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள் மீது பதியப்பட்டுள்ளன.

இதில் கருங்கல்பாளையத்தில் எட்டு வழக்குகளும் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகளும் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலை.ரா 

கருத்துகள் இல்லை: